சார்ஜரில் இருந்த செல்போன் வெடித்து 7 வயது சிறுவன் பரிதாப பலி!!

Read Time:1 Minute, 38 Second

c8e5af8a-2ef1-495d-bf37-5913d61aefb9_S_secvpfமேற்கு வங்க மாநிலம், புருலியா மாவட்டத்தில் சார்ஜ் ஏறிக்கொண்டிருந்த செல்போன் வெடித்து 7 வயது சிறுவன் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அங்குள்ள சிருடி என்கிற கிராமத்தில், 1-ம் வகுப்பு படித்து வரும் சிறுவன், இன்று காலை வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, அவனருகே சார்ஜ் போடப்பட்டிருந்த செல்போன் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் சிதறிய சில்லுகள் அச்சிறுவனின் உடலைத் துளைத்து கடும் தீக்காயங்களையும் ஏற்படுத்தியது.

சத்தம் கேட்டு ஓடி வந்த சிறுவனின் பெற்றோர், அவனது உடலில் பற்றிய தீயை தண்ணீர் ஊற்றி அணைத்து, அவசர அவசரமாக அருகிலுள்ள சதார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் காயம் காரணமாக சிறுவன் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

சிறுவனது உயிர் போகக் காரணமாக இருந்தது, சீனாவில் தயாரிக்கப்பட்ட மலிவு விலை செல்போன் என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கருவுற்ற தாயின் புகை பழக்கத்தினால் வயிற்றில் இருக்கும் சிசு படும் பாடு: வீடியோ இணைப்பு!!
Next post திருப்பதி அருகே சூட்கேசில் பெண் பிணம்: போலீஸ் விசாரணை!!