தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் டெல்லி பெண் ஊழியர் இந்திய அழகியாக தேர்வு!!

Read Time:2 Minute, 13 Second

e05c5378-78f8-4e4b-8465-4d9d7af1427e_S_secvpf2015–ம் ஆண்டுக்கான இந்திய அழகியை தேர்வு செய்வதற்கான போட்டி நாடு முழுவதும் 13 நகரங்களில் நடந்தது. இதில் கலந்து கொண்ட அழகிகளில் இருந்து 21 பேர் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

மும்பை யஷ்ராஜ் ஸ்டூடியோவில் அமைக்கப்பட்ட பிரமாண்ட அரங்கில் பல்வேறு பிரிவுகளில் இறுதிப் போட்டிகள் நடந்தது. இதில் 5 பேர் ‘டாப்–5’ அழகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

5 பேரும் ஒவ்வொருவராக மேடைக்கு அழைத்து வரப்பட்டனர். நடுவர்கள் வாக்களித்து முதல் 3 இடங்களைப் பெற்ற அழகிகளை தேர்வு செய்தனர்.

முடிவில் டெல்லி பெண் அதிதி ஆர்யா முதலிடத்தை பிடித்து இந்திய அழகியாக தேர்வு செய்யப்பட்டார். ஆப்ரிக் ரச்சேல் வாஸ், வர்டிகா சிங், ஆகியோர் 2–வது, 3–வது இடத்தைப் பிடித்தனர்.

நடுவர்களாக நடிகர்கள் ஜான் ஆபிரகாம், அனில்கபூர், நடிகைகள் மனிஷா கொய்ராலா, ஷில்பா ஷெட்டி, சோனாலி பிந்த்ரே, அபு ஜானி, சந்தீப்கோஸ்லா, ஆகியோர் இருந்து முதல் 3 இடம் பிடித்த அழகிகளை தேர்வு செய்தனர்.

நடிகை ஜாக்குலியின் பெர்னாண்டஸ், நடிகர் ஷாகித் கபூர் ஆகியோர் சிறப்பு விருந்தனராக கலந்து கொண்டனர்.

அழகி பட்டம் வென்ற அதிதி ஆர்யா உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்கிறார்.

அதிதி ஆர்யா டெல்லியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஆராய்ச்சி பகுப்பாளராக பணி புரிகிறார். இங்கு பணியில் இருந்து கொண்டே அழகிப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தியாவில் 10-ல் ஒருவருக்கு மன அழுத்தம் உள்ளது: ஆய்வில் தகவல்!!
Next post திராவிடர் கழகம் சார்பில் நடத்தப்படும் தாலி அகற்றும் விழாவுக்கு, செல்போனில் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிப்பு!!