தூத்துக்குடி நகை பறிப்பு வழக்கில் திடீர் திருப்பம்: கொழுந்தனுடன் சேர்ந்து கொள்ளை நாடகமாடிய பெண் கைது!!
கடந்த 22–ந்தேதி அதிகாலை இருவரும் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் வீட்டின் கதவை தட்டி இருவரையும் எழுப்பினார். இருவரும் எழுந்து சென்று கதவை திறந்தனர். அப்போது வெளியே நின்ற மர்ம நபர் துர்காதேவி, செல்லம் ஆகியோரின் முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்தார். இருவரும் மயங்கவே, அவர்கள் கழுத்தில் அணிந்திருந்த 18 பவுன் தங்க செயின்களை பறித்து சென்று விட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசார் விசாரணை நடத்தி நகை பறித்து சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் துர்கா தேவியிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்குபின் முரணான தகவல்களை கூறினார். போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தவே, அவர் தனது கணவர் ரெகுராஜனின் தம்பி மதன்ராஜூடன் சேர்ந்து மாமியாரின் நகைகளை கொள்ளையடித்து நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மதன்ராஜையும், துர்காதேவியையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது பரபரப்பு தகவல் கிடைத்தது .அதன் விவரம் வருமாறு:–
ரெகுராஜின் தம்பியான மதன்ராஜ் (29) வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால் அவரது செலவுக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம் அண்ணி துர்காதேவியிடம் கேட்டு வந்துள்ளார். அவரும் கணவர், மாமியாருக்கு தெரியாமல் மதன்ராஜ்க்கு பணம் கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஏதோ ஒரு தேவைக்காக மதன்ராஜ்க்கு அதிக பணம் தேவைப்பட்டது. அந்த பணத்தை துர்காதேவியிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் கேட்ட பெரும் தொகையை துர்காதேவியால் கொடுக்கமுடியவில்லை. இதனால் பணத்தை ஏற்பாடு செய்ய இருவரும் ரகசிய திட்டம் தீட்டினர். அதில் மதன்ராஜ் தனது தாயின் நகைகளையே திருட திட்டமிட்டார். இதற்கு துர்காதேவியும் சம்மதம் தெரிவித்தார்.
இருவரும் திட்டமிட்டது போல் கடந்த 22–ந்தேதி அதிகாலை மதன்ராஜ் ஒரு திருடனாக அவரது வீட்டுக்குள் வந்துள்ளார். அதற்கு முன்னதாகவே மாமியார் செல்லத்துக்கு, துர்காதேவி மயக்க மாத்திரை கலந்த பானத்தை கொடுத்துவிட்டதால், அவர் மயங்கி கிடந்தார். இதையடுத்து மதன்ராஜ் தாயார் செல்லம் அணிந்து இருந்த நகைகளை பறித்தார். தனது நகைகளை மட்டும் அப்படியே விட்டுச் சென்றால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுவிடும் என்று எண்ணிய துர்காதேவி, தனது நகைகளையும் திருடனாக வந்த கொழுந்தனிடம் கழற்றி கொடுத்துள்ளார். பின்னர் அவரும் மயங்கியது போல் நடித்துள்ளார்.
மயக்கம் தெளிந்து எழுந்த செல்லம் தனது நகைகளும், மருமகளின் நகையையும் கொள்ளையன் பறித்து சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து தூத்துக்குடி வடபாகம் போலீசாரிடம் புகார் செய்தார். புகாரில் தன்னிடம் இருந்த நகைகள், மருமகளின் நகைகளை முகத்தில் மயக்க மருந்தை அடித்து கொள்ளையன் பறித்துச் சென்றதாக கூறியிருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
துர்காதேவியிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் மதன்ராஜ், துர்காதேவியுடன் சேர்ந்து நகைகளை திருடி நாடகமாகடியது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating