லாரி டிரைவர் கொலை: கூலிப்படையை ஏவி கொன்றேன் கைதான மனைவி வாக்குமூலம்!!

Read Time:4 Minute, 8 Second

3a7be9c1-1674-4385-b66b-43726e5d162e_S_secvpfசேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்தவர் சின்னான் (35). இவர் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பெரியார் நகரில் தங்கி தண்ணீர் லாரி டிரைவாக வேலைப்பார்த்து வந்தார். இவரது மனைவி தனகொடி (30).

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு சின்னான் பிணமாக கிடந்தார். இதையடுத்து பள்ளிபாளையம் போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இந்த கொலையில் சின்னானின் மனைவி தனகொடி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் தனகொடியின் செல்போன் மூலம் துப்பு துலக்கினர்.

அப்போது கொலை நடந்த அன்று மாலை தனகொடி பள்ளிபாளையம் ஆவாரங்காடு பகுதியை சேர்ந்த சீனிவாசன் (30), பவித்ரன் (30) ஆகிய 2 பேரிடமும் நீண்ட நேரம் பேசியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் நேற்று முன்தினம் பவானி கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திய போது தனகொடி, அதே பகுதியை சேர்ந்த வக்கீல் குமாஸ்தா அன்பு என்பவர் மூலம் கூலிப்படையை ஏவி கணவரை தீர்த்துக்கட்டியது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தனகொடி, அன்பு, சவுந்தர்ராஜ் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

தொடர்ந்து தனகொடி கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது :–

எனது கணவருக்கும், அவர் வேலைப்பார்த்த கம்பெனியில் உள்ள ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. கடந்த 2 ஆண்டுகளாக எனது கணவர் வீட்டிற்கு சரியாக வரமாட்டார். அவ்வாறு வந்தாலும் உடனடியாக சென்று விடுவார். பல முறை சொல்லியும் அவர் கள்ளத்தொடர்பை கைவிடவில்லை.

இதையடுத்து நான் வக்கீல் குமாஸ்தா அன்புவை கடந்த 3 மாதத்துக்கு முன்பு சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம் கவலைப்படாதீங்க, தீர்த்து கட்டியிடலாம் என்று கூறினார். அதன் படி கூலிப்படையை நியமித்து கடந்த 3 மாதமாக என் கணவரை கொலை செய்ய திட்டம் போட்டோம்.

ஆனால் அவர் கடந்த 3 மாத காலமாகவே வீட்டிற்கு வந்தவுடன் சென்று விட்டார். இதனால் அவரை கொலை செய்ய முடியவில்லை. இந்த நிலையில் தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார்.

இதையடுத்து நான் கூலிப்படையினருக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தேன். அவர்கள் இரவு 8 மணியளவில் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் கை, கால்களை கட்டியும், வாயில் துணியை திணித்தும் அவரை வெளியே தூக்கி சென்று தாக்கினர்.

தொடர்ந்து உடல் முழுவதும் பீளேடால் கீறினார்கள். அப்போது அவரது உடலில் இருந்து ரத்தம் அதிகளவில் வெளியேறியது. இதில் அவர் பலியானார். கூலிப்படையினக்கு அவ்வப்போது ரூ. 1000, ரூ. 500 என்று கொடுத்து வந்தேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

கைதான 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குடிபோதையில் ரகளை செய்த தந்தையை கொன்ற வாலிபர் கைது!!
Next post தூத்துக்குடி நகை பறிப்பு வழக்கில் திடீர் திருப்பம்: கொழுந்தனுடன் சேர்ந்து கொள்ளை நாடகமாடிய பெண் கைது!!