கடற்படை விமான விபத்து: பலியான பெண் அதிகாரி உடல் மீட்பு!!

Read Time:1 Minute, 37 Second

1201be8c-5816-4005-accb-5cefe815c8ca_S_secvpfகோவாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்படைக்கு சொந்தமான ‘டார்னியர்’ ரோந்து விமானம், 24-ந்தேதி இரவு அரபிக்கடலில் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் பயணம் செய்த 3 பேரில் நிகில் ஜோஷி என்ற அதிகாரி, காயங்களுடன் மீட்கப்பட்டார். விமானத்தின் விமானி, பார்வையாளராக சென்ற பெண் அதிகாரி ஆகிய 2 பேரின் கதி என்ன என தெரியாமல் இருந்தது.

இந்த நிலையில், பெண் அதிகாரி கிரண் ஷெகாவத்தின் உடல், அரபி கடலில் 60 மீட்டர் ஆழத்தில் கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் உடல் பகுதியில் இருந்து நேற்று மீட்கப்பட்டது. கிரண் ஷெகாவத், கடந்த ஜனவரி மாதம் 26-ந்தேதி டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் இடம் பெற்றிருந்த அனைத்து மகளிர் கடற்படை அணிவகுப்பில் பங்கு பெற்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் விமானியின் கதி என்ன ஆனது என்பது இன்னும் தெரியவில்லை. அவரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

டெல்லியில் கடற்படை செய்தி தொடர்பாளர் டி.கே. சர்மா இந்த தகவல்களை நேற்று தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மேற்கு வங்காளத்தில் நடந்த கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் மேலும் ஒருவர் கைது!!
Next post ஜோலார்பேட்டையில் வாலிபர் அறுத்துக்கொண்ட நாக்கின் துண்டான பகுதி இணைப்பு!!