ஜோலார்பேட்டையில் வாலிபர் அறுத்துக்கொண்ட நாக்கின் துண்டான பகுதி இணைப்பு!!

Read Time:3 Minute, 43 Second

69abaa62-b2dd-4724-a536-c88492d3d989_S_secvpfவேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த மிட்னாஸ்குப்பம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜி. இவரது மகன் சுதாகர் (வயது 27). கட்டிட தொழிலாளியான இவர், தீவிர கிரிக்கெட் ரசிகர். சுதாகருக்கு திவ்யா என்ற மனைவியும், 4 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.

ஜோலார்பேட்டையில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்ற சுதாகர் அங்குள்ள பொன்னேரி வேடியப்பன் கோவிலுக்கு சென்று பிளேடால் தனது நாக்கை அறுத்து கோவில் பீடத்தில் வைத்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் வாலிபரின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுபற்றி சுதாகரின் உறவினர்கள் சிலர் கூறுகையில்:–

கிரிக்கெட் மீது அதிக ஈடுபாடு இருந்ததால் இந்தியா வெற்றி பெற வேண்டும் என வேண்டி நாக்கை துண்டித்து வைத்ததாக கூறினர்.

அதே நேரத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக சுதாகர் இப்படி செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தம்பதிக்கு முதல் குழந்தை பிறந்து 4 வருடம் ஆகியும் 2–வது குழந்தை இல்லை. இது சம்பந்தமாக அவர்களுக்குள் குடும்ப பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக ஒருவருக்கு ஒருவர் பேசாமல் இருந்து வருகின்றனர். மனைவியிடம் தன்னிடம் பேசும்படி வற்புறுத்தியுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு திவ்யாவிடம் பேச முயன்றுள்ளார். அவர் பேசாமல் சென்றுவிட்டதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த அவர் நீ என்னிடம் பேசாமல் இருக்கிறாயா? இனி நான் எப்போதுமே உன்னிடம் பேசமாட்டேன் என கூறி வெளியேறி உள்ளார். அதன் பின்னர் தான் தனது நாக்கை கோவிலில் துண்டித்துள்ளார்.

நாக்கை அறுத்துக் கொண்டது குடும்ப பிரச்சனை காரணமா? அல்லது கிரிக்கெட் மோகமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கல்லில் வைக்கப்பட்டிருந்த நாக்கு வெயிலில் சுருங்கி கீழே விழுந்து கிடந்தது. அதை சுதாகரின் நண்பர்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

டாக்டர்கள் குழு உடனடியாக துண்டிக்கப்பட்ட பாகத்தை அறுவை சிகிச்சை மூலம் இணைத்துள்ளனர். இருப்பினும் துண்டிக்கப்பட்ட நாக்கு இணையுமா என்பதை ஓரிரு நாட்கள் கழித்தே அறிய முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் சுதாகர் வாயில் அறுவாளை வைத்தபடி பப்பாளி மரத்தில் ஏறியபோது தவறி விழுந்து நாக்கு துண்டானதாக போலீசார் தரப்பில் கூறுகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடற்படை விமான விபத்து: பலியான பெண் அதிகாரி உடல் மீட்பு!!
Next post தண்டையார்பேட்டையில் சொத்து தகராறில் தொழில் அதிபரை மனைவி–மகன்கள் கடத்த முயற்சி!!