விண்வெளி மையத்தில் சலூன்- மிதந்தபடி முடிவெட்டும் விண்வெளி வீரர்!!

Read Time:2 Minute, 10 Second

72c856f4-62cf-453c-a889-3b34278f773a_S_secvpfசர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் விண்வெளி வீரர் ஒருவர் தன்னுடைய சக வீராங்கனைக்கு மிதந்தபடியே முடிவெட்டும் புகைப்பட வீடியோவை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த குறிப்பிட்ட வீடியோவில் டெர்ரி விரிட்ஸ் என்ற விண்வெளி வீரர், தன்னுடன் தங்கி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் சமந்தா கிறிஸ்டோபரெட்டி என்ற வீராங்கனைக்கு முடிவெட்டுகிறார். மிதந்தபடியே முடிவெட்டும் டெர்ரி, வெட்டப்படும் முடி விண்வெளித்தளத்தில் பறந்து சென்றுவிடாமல் இருக்க ஒரு வாக்வம் கிளீனரை பயன்படுத்தி முடிகளை உறிஞ்சி எடுக்கிறார். அதேசமயம் சமந்தா தான் மிதந்து சென்றுவிடாமல் இருக்க அருகில் இருக்கும் கம்பியை விட்டுவிட்டு பிடித்தப்படி டெர்ரிக்கு உதவியாக வாக்வம் கிளீனரையும் பயன்படுத்துகிறார்.

பார்ப்பதற்கு நவீன அறிவியல் முடித்திருத்தகம் போல காட்சியளிக்கும் அந்த புகைப்பட வீடியோவை பலரும் விரும்பி பார்த்து வருகிறார்கள்.

டெர்ரி விரிட்ஸ் மற்றும் சமந்தா கிறிஸ்டோபரெட்டி இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து வரும் மே 14-ம் தேதி பூமிக்கு திரும்புகிறார்கள். விண்வெளி வீரர் டெர்ரி விரிட்ஸ் தனக்கு கைவசம் இன்னொரு வேலை இருப்பதாக (முடித்திருத்தும் தொழில்) விளையாட்டாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒடிசாவில் 2014ம் ஆண்டில் 2011 கற்பழிப்பு வழக்குகள்: மாநில அரசு வெள்ளை அறிக்கை!!
Next post இடுக்கியில் அதிக அளவில் நடைபெறும் குழந்தை திருமணங்கள்: 385–க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு!!