ஒடிசாவில் 2014ம் ஆண்டில் 2011 கற்பழிப்பு வழக்குகள்: மாநில அரசு வெள்ளை அறிக்கை!!

Read Time:2 Minute, 8 Second

7550171c-a017-47d9-9b88-a8f83f561c55_S_secvpfஒடிசா மாநிலத்தில் கடந்த ஆண்டு 2011 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அம்மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது.

மாநிலத்தில் நடைபெற்ற குற்ற சம்பவங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு நிலைமை தொடர்பாக சட்டசபையில் இன்று வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2013ம் ஆண்டு ஒடிசாவில் 1832 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியிருப்பதாகவும், கடந்த ஆண்டு 2011 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘குற்ற வழக்குகளைப் பொருத்தவரையில் 2013ல் 90 ஆயிரத்து 184 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. அது கடந்த ஆண்டு 93 ஆயிரத்து 657 ஆக அதிகரித்துள்ளது. 2013ல் 1454 ஆக இருந்த கொலை வழக்குகள், கடந்த ஆண்டு 1450 ஆக குறைந்துள்ளன.

மாவோயிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் சட்டம் ஒழுங்கு நிலைமை மேம்பட்டுள்ளது. சாசி முலியா ஆதிவாசி சங்க தலைவர் நாச்சிகா லிங்கா உள்ளிட்ட 99 மாவோயிஸ்டுகள் சரண் அடைந்துள்ளனர். 76 வன்முறைச் சம்பவங்களில் 20 பொதுமக்கள், 6 மாவோயிஸ்டுகள் இறந்துள்ளனர்.’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்திருப்பதை சுட்டிக் காட்டிய சட்டசபை எதிர்க்கட்சி (காங்கிரஸ்) தலைவர் நரசிங்க மிஷ்ரா, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்திருப்பதாகவும், மாநிலம் அமைதியாக இருப்பதாக அரசு கூறுவது முரண்பாடாக உள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகை தமன்னா (அழகிய படங்கள்) -அவ்வப்போது கிளாமர்-
Next post விண்வெளி மையத்தில் சலூன்- மிதந்தபடி முடிவெட்டும் விண்வெளி வீரர்!!