மனநலம் குன்றிய இளம்பெண் கற்பழிப்பு: மாநகராட்சி டிரைவர் கைது!!

Read Time:3 Minute, 4 Second

4509a307-98c6-4b5c-858e-5e54ed232d28_S_secvpfகோவை குனியமுத்தூரை அடுத்துள்ள குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் ராணி (வயது 28). பெயர் மாற்றப்பட்டுள்ளது. சற்று மன நலம் குன்றியவர்.

இவரது தந்தை ராஜன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த 3 மாதத்துக்கு முன் இறந்து விட்டார். ராஜனின் நண்பர் ராயப்பன் (55). மாநகராட்சியில் டிரைவராக உள்ளார். ராஜன் இருந்த போது குடும்ப நண்பராக இருந்தார். அவர் இறந்த பின்னரும் அவரது வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவார்.

ராணியின் தாய் அங்குள்ள பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று ராணியின் தாய் வேலைக்கு சென்றார். அப்போது வீட்டில் ராணியை தவிர யாரும் இல்லாததை அறிந்த ராயப்பன் நைசாக வீட்டுக்குள் நுழைந்தார். பின்னர் கதவை உள்பக்கமாக பூட்டினார்.

ராணியின் தாய் மதியம் வீட்டுக்கு வந்து ராணிக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு அவரும் சாப்பிட்டுவிட்டு செல்வது வழக்கம். அதேபோல வீட்டுக்கு வந்த ராணியின் தாய் வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டுள்ளதை கண்டு கதவை தட்டினார்.

சிறிது நேரத்தில் ராயப்பன் அரைகுறை ஆடையுடன் கதவை திறந்து கொண்டு வெளியே ஓட்டம் பிடித்தார். சந்தேகமடைந்த ராணியின் தாய் ராணியிடம் கேட்டுப்பார்த்தார். ஆனால் ராணியால் எதுவும் கூற முடியாத நிலையில் இருந்தார். ஆனால் அவர் அணிந்திருந்த ஆடைகள் அலங்கோலமாக இருந்ததை கண்டு ஆத்திரமடைந்தார்.

சந்தேகமடைந்த அவர் மகளை அழைத்துக்கொண்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். நடந்தவற்றை டாக்டர்களிடம் கூறி தனது மகள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி உள்ளாரா? என்று சோதனை நடத்த வேண்டும் என்று கேட்டார்.

ராணியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்தனர். இதனையடுத்து ராணியின் தாய் தனது மகளை அழைத்துக்கொண்டு குனியமுத்தூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று நடந்தவற்றை கூறினார்.

இதைத்தொடர்ந்து வழக்கு ஆர்.எஸ்.புரம் மகளிர் போலீசுக்கு மாற்றப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து ராயப்பனை கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜோலார்பேட்டையில் குழந்தை வரம் கேட்டு கோவில் முன்பு நாக்கை அறுத்து வைத்த வாலிபர்!!
Next post வெடிகுண்டு வைத்து வாலிபர் கொலை: அண்ணன்–தம்பி உள்பட 3 பேருக்கு தலா மூன்று ஆயுள் தண்டனை!!