தூத்துக்குடியில் குடிநீர் குழாய்களை உடைத்து தண்ணீரை திருடும் கும்பல்!!

Read Time:2 Minute, 38 Second

a2bbe42c-a6ff-45e5-8d90-9071d8a190cf_S_secvpfதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே வாழவல்லானில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து தூத்துக்குடி வரை உள்ள நூற்றுகணக்கான கிராமங்களுக்கும் வசிப்பிடங்களுக்கும் குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது.

பல ஆண்டுகளாக இந்த குடிநீர் திட்டப்பணி சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் வாழவல்லானில் இருந்து தூத்துக்குடி வரை உள்ள 30 கி.மீ. தூரம் சுற்றளவு மக்களுக்கு இந்த குடிநீர் திட்டம் ஜீவாதாரமாக விளங்கி வருகிறது.

இந்நிலையில் இந்த குடிநீர் திட்ட குழாய் வரும் வழியில் பழைய காயல் முக்கானி இடையே உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக மாதந்தோறும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்படுவதும் அதனை சீரமைக்கும் வரை ஒருவாரம் அல்லது 10 நாள் மக்களுக்கு தண்ணீர் கிடைக்காத சூழல் ஏற்படுவதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

தற்போதும் ஒருவாரமாக தண்ணீர் வரவில்லை இந்த நிகழ்வு இயற்கையானதல்ல.

இந்த 4 ஆண்டுகாலமாக 30 கி.மீ. தூரம் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு செல்லும் குடிநீரை, ஒரு குறிப்பிட்ட சிலர் மட்டும் தங்களின் தேவைக்கு சுயநலமாக பயன்படுத்தி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

மேலும் அந்த மர்ம கும்பல் மாதந்தோறும் 10–நாள் தண்ணீரை திருட்டுதனமாக எடுத்து அதை முறைகேடாக விற்பனை செய்து பணம் சேர்த்து நிதி இழப்பை ஏற்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

எனவே இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஸ் விசாரணை செய்து தவறு செய்தவர்களை தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மேற்குவங்க சி.ஐ.டி. போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டை: கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளி கைது!!
Next post ரெயில் தண்டவாளத்தில் தலை துண்டித்த நிலையில் பிணமாக கிடந்த ரிக் தொழிலாளி!!