போதையில் மது என்று நினைத்து பெட்ரோல் குடித்த தொழிலாளி சாவு!!

Read Time:1 Minute, 43 Second

88156f6d-72bc-4d5f-acd4-ab8e1ad32cfd_S_secvpfவெள்ளகோவில் முருகம்பாளையத்தை சேர்ந்த ராமன் மகன் வடிவேல் (வயது 40). விவசாய கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லை.

குடிப்பழக்கம் உள்ள வடிவேல் அடிக்கடி குடித்து விட்டு போதையில் தள்ளாடியபடி வீட்டுக்கு வருவார். நேற்று வீட்டில் இருந்த வடிவேல் மது அருந்தினார்.

மது போதையில் இருந்தும் இன்னும் குடிக்க ஆசைப்பட்டார். வீட்டில் இருந்த பாட்டிலை திறந்து கடகடவென ஒரே மூச்சில் குடித்தார்.

குடித்து முடித்த பின்னர் தான் தெரிந்தது மது அல்ல பெட்ரோல் என்று. வயிறு எரிய ஆரம்பித்தது. வேதனை தாங்கமுடியாமல் வடிவேல் அலறி சத்தம்போட்டார்.

அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது மது என்று நினைத்து பெட்ரோலை குடித்து விட்டேன். என்னை காப்பாற்றுங்கள் என்று கெஞ்சினார். இதனையடுத்து அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி வடிவேல் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து வடிவேலுவின் அண்ணன் முருகேசன் கொடுத்த புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மர்ம உறுப்பு துண்டிக்கப்பட்டு சாலையில் கிடந்த 2 இளைஞர்கள் மருத்துவமனையில் அனுமதி!!
Next post 5 வயது சிறுமி கடத்தி கொலை: கோவில் குருக்களுக்கு 10 ஆண்டு ஜெயில்- வேலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு!!