2 வயது குட்டிப்பெண் டாலி: வில்வித்தைப் போட்டியில் தேசிய அளவில் சாதனை!!

Read Time:2 Minute, 14 Second

75082795-f22c-4ef7-a2d1-4a1e06777111_S_secvpfவாடகைத்தாய் மூலமாக இந்த உலகிற்கு வந்த குட்டிப் பெண் ’டாலி ஷிவானி செருகுரி’ . 2010-ம் ஆண்டு சர்வதேச வில்வித்தை பயிற்சியாளரான இவரது அண்ணன் ஒரு சாலை விபத்தில் பலியானார். 2004-ம் ஆண்டு இவரது மூத்த சகோதரியும் பலியானார். அவர்களின் வழியில், ஏன் அவர்களையே மிஞ்சும் வகையில் ஒரு அரிய சாதனையை செய்திருக்கிறாள் டாலி.

5 மற்றும் 7 மீட்டர் அளவிலான வில்வித்தை போட்டியில் 200 புள்ளிகள் பெற்று தேசிய அளவில் இளம் வயதில் அதிக புள்ளிகள் பெற்ற இந்தியர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார் டாலி. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று அரங்கேறிய டாலியின் இந்த சாதனை, இந்திய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

இந்த அரிய சாதனையை நேரில் பார்த்த சவுத்ரி ”இது யாரலும் எளிதில் முறியடிக்க முடியாத மிகப்பெரும் சாதனை” என்கிறார். வில்வித்தை வீரர்களுக்கான அகாடமி நடத்தி வரும் டாலியின் தந்தையான செருகுரி, சிறு வயதிலிருந்தே டாலியிடம் கார்பன் அம்புகளைக் கொடுத்து ஆரம்ப கால பயிற்சியைத் தொடங்கியிருக்கிறார். அவளது ஆர்வத்தைப் பார்த்து விரைவிலேயே வில்வித்தை பயிற்சி கொடுக்க ஆரம்பித்து விட்டார்.

இதோ, இன்று தங்கப்பதக்கத்துடனும், சாதனைச் சான்றிதழுடனும் தந்தையின் முன் கம்பீரமாக நிற்கும் இந்த குட்டிப்பெண் டாலி இன்னும் 9 நாள்களில் தன் 3-வது பிறந்த நாளைக் கொண்டாட இருக்கிறாள்….

அட்வான்ஸ் ஹேப்பி பர்த்டே டாலி……

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் குழாய் தீப்பிடித்து எரிந்து காயமடைந்த நோயாளி பரிதாப பலி!!
Next post கோவையில் ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்ட பெண்களை விபசாரத்தில் தள்ளிய கொடுமை: 2 பேர் கைது!!