இயற்கை உபாதையை கழிக்க சென்ற 13 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன்!!

Read Time:1 Minute, 54 Second

0273a930-0440-4cbc-949b-dd727361e3cd_S_secvpfஅரியானா மாநிலத்தில் இயற்கை உபாதையை கழிக்க சென்ற 13 வயது சிறுமி கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியானாவின் ஜிண்ட் மாவட்டத்தில் உள்ள ராம் காலனியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 13 வயது சிறுமி நேற்று முன்தினம் இரவு, இயற்கை உபாதையை கழிப்பதற்காக வீட்டிற்கு வெளியே சென்றாள். அப்போது, பக்கத்து வீட்டில் இருந்த வக்கிரகுணம் கொண்ட வாலிபன் ஒருவன் அவளை தனது இருசக்கர வாகனத்தில் கடத்திச்சென்று அருகிலுள்ள புதிய கிருஷ்ணா காலணியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

இந்த சம்பவத்தை வெளியே சொன்னால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டிவிட்டு சிறுமியை குப்பையைப் போல வீட்டினருகே எறிந்து விட்டுத் தப்பி ஓடிவிட்டான். அவனால் நரக வேதனையை அனுபவித்த சிறுமி நடந்த சம்பவத்தை தனது அம்மாவிடம் கூறி கதறியழுதாள்.

அவர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். ஏற்கனவே மற்றொரு சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளியான ராஜட்டை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போலீஸ் கையாள் என நினைத்து கூட்டாளியை சுட்டுக் கொன்றவனை அடித்துக் கொன்ற கிராம மக்கள்!!
Next post மர்ம உறுப்பு துண்டிக்கப்பட்டு சாலையில் கிடந்த 2 இளைஞர்கள் மருத்துவமனையில் அனுமதி!!