உலக நெடுஞ்சாலைகளை கலக்க வரும் பகுதிநேர தானியங்கி லாரிகள்: வீடியோ இணைப்பு!!

Read Time:3 Minute, 33 Second

df7ef4e5-3016-4985-81df-385831e90a57_S_secvpfசென்னையில் இருந்து ஒரு லோடு மஞ்சளை லாரியில் கொண்டு சென்று கொல்கத்தாவில் சேர்ப்பிக்க வேண்டுமானால் சுமார் 1700 கிலோ மீட்டர் தூரத்தை சாலை மார்க்கமாக சென்றடைய வேண்டும். மணிக்கு சராசரியாக 60 கிலோ மீட்டர் வேகத்தில் வழியில் எங்கும் நிற்காமல் சென்றாலும் கூட குறைந்தபட்சம் 30 மணிநேரம் ஒரு டிரைவர் லாரியை ஓட்டிச்செல்ல வேண்டும்.

500 கிலோ மீட்டருக்கு 2 மணி நேரம் ஓய்வு எடுத்து சென்றாலும் ஒன்றரை நாள் பயணத்துக்கு பின்னரே கொல்கத்தா நகரை சென்றடைய முடியும். கொல்கத்தாவை சென்று சேர்ந்த பின்னர் பயண நேரத்துக்கு அதிகப்படியான நேரம் ஓய்வு எடுத்த பின்னரே அடுத்த சவாரிக்கு அந்த டிரைவர் தயாராக முடியும்.

இப்படிப்பட்ட தொலைதூர பயணத்தை நெடுஞ்சாலை பாதையில் மேற்கொள்ளும் லாரி டிரைவர்களுக்கு வரப்பிரசாதமாக கனரக வாகன உற்பத்தியில் உலகின் முன்னோடி நிறுவனமான ஜெர்மனியின் ‘பென்ஸ்’ மோட்டார்ஸ், பகுதிநேரம் தானியங்கி முறையில் (ஆட்டோ பைலட்) இயங்கும் ‘ஃபியூச்சர் டெக்’ லாரிகளை தயாரித்து வருகின்றது.

இந்த லாரிகள் 4 வழிப்பாதை மற்றும் 6 வழிப்பாதை கொண்ட நெடுஞ்சாலைகளில் ஓடும் போது, டிரைவர் ஓய்வெடுக்க விரும்பினால் ஆட்டோ பைலட் பொத்தானை அழுத்திவிட்டு, தனது இருக்கையில் ஜாலியாக சாய்ந்து கொண்டு பாட்டு கேட்கலாம், வீடியோ பார்க்கலாம். சாப்பாட்டு பொட்டலத்தை அவிழ்த்து, ஆற அமர காற்றோட்டமாக சாப்பிடலாம். லாரி நிற்காமல் தானியங்கி முறையில் ஓடிக்கொண்டே இருக்கும்.

வழியில் எதிரே ஏதாவது வாகனம் குறுக்கிட்டால், இந்த வாகனங்களில் உள்ள கம்ப்யூட்டர் சென்சார்கள் அதை உணர்ந்து கொண்டு சமயோஜிதமாக செயல்படும் வகையிலும், பின்புறத்தில் இருந்து ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் போன்றவற்றின் அபாய சங்கு ஒலிக்க கேட்டால், பின்னால் வரும் வாகனங்களுக்கு ஒதுங்கி வழிவிடும் முறையிலும் கணினி மூலம் இந்த லாரிகளின் செயல்பாடு கட்டுப்படுத்தப்படும்.

பாதுகாப்பான பயணம், எரிபொருள் சிக்கனம், மாசில்லா சாலைகள் ஆகிய மூன்று அம்சங்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டு வரும் இந்த பகுதிநேர தானியங்கி லாரிகள் வரும் 2025-ம் ஆண்டுக்குள் விற்பனைக்குவந்து, வெற்றிகரமாக நெடுஞ்சாலைகளில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தலித் பெண் மந்திரி பற்றி தரக்குறைவான பேச்சு: ரோஜா மீது வன்கொடுமை வழக்கு!!
Next post உ.பி தொடர் கொடூரம்: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 7 வயது சிறுமிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!!