மெரினா கடற்கரையில் போலீஸ் போல் நடித்து பைக் திருட முயன்ற வாலிபர் நண்பருடன் கைது!!

Read Time:1 Minute, 57 Second

130560ff-065f-4645-8bf5-8d38030b8aa0_S_secvpfசென்னை மெரினா கடற்கரையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் இருப்பது உண்டு. இதனை பயன்படுத்தி ஒரு கும்பல் பொது மக்களின் மோட்டார் சைக்கிள்களை திருடி வந்தன.

இதுகுறித்து அண்ணா சதுக்கம் போலீஸ் நிலையத்திற்கு அடிக்கடி புகார்கள் வந்ததையடுத்து இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் தலைமையில் போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

நேற்று போலீசார் சங்கர், ராஜா, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மாறுவேடத்தில் கடற்கரையில் ரோந்து சென்றனர்.

அப்போது 2 வாலிபர் கடற்கரையில் நின்ற ‘‘பல்சர்’’ பைக்கை கள்ளச்சாவி கொண்டு திருட முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

கைதானவர்களில் ஒருவன் தண்டையார்பேட்டையை சேர்ந்த குமார். இவர் மீது பல்வேறு கொலை முயற்சி வழக்குகள் உள்ளது. இன்னொருவன் ஜாகீர். திருவொற்றியூர் தாங்கல் பகுதியை சேர்ந்தவன். இவன் பாரிமுனை, வண்ணாரப்பேட்டை, தண்டையார் பேட்டை போன்ற பல இடங்களில் போலீஸ் போல் நடித்து 11 மோட்டார் சைக்கிளை திருடி உள்ளான்.

இருவரும் திருடிய மோட்டர் சைக்கிள்களின் நம்பர் பிளேட்டை மாற்றி போலி ஆர்.சி. புத்தகம் தயாரித்து விற்பனை செய்துள்ளனர். இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முன்னதாகவே நடிகையிடம் கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் செய்த நடிகர்!!
Next post போராட்டத்தைக் காட்டிக் கொடுத்த, “புலிவால்” மாபியாக்கள்; “இனியொரு”விற்குக் கொலை மிரட்டல்..!!