பெண் போலீஸ் ஆபாச ஆடியோவில் சிக்கிய உதவி கமிஷனர் விடுப்பில் சென்றார்: இறுதிக்கட்ட விசாரணை தீவிரம்!!

Read Time:2 Minute, 25 Second

fee815ed-8b7e-4d2a-bb99-f5179d6fb67c_S_secvpfசென்னை மாநகர போலீஸ் உதவி கமிஷனர் ஒருவர், பெண் போலீசுடன் ஆபாசமாக பேசிய உரையாடல், செல்போன் ‘வாட்ஸ்-அப்’பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட உதவி கமிஷனர் அவர் பணிபுரிந்த இடத்தில் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் மீது துறை ரீதியிலான விசாரணை நடந்து வருகிறது. கமிஷனர் ஜார்ஜ், வட சென்னை கூடுதல் கமிஷனர் ரவிக்குமார் ஆகியோர் அவரிடம் நேரடியாகவே விசாரணை நடத்தினர்.

அப்போது ஆபாச ஆடியோவை போட்டுக்காட்டி அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு பதில் அளிக்க முடியாமல் உதவி கமிஷனர் திணறினார். அதே போல் அவரது ஆபாச பேச்சை பதிவு செய்து வாட்ஸ் -அப்பில் பரவ விட்ட பெண் போலீசை அழைத்தும் போலீஸ் அதிகாரிகள் விசாரித்தனர்.

அப்போது பெண் போலீஸ் தெரியாமல் செய்து விட்டேன் என்று கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

கடந்த 4 நாட்களுக்கு மேலாக கமிஷனர் அலுவலகத்தில் வைத்து நடத்தப்பட்ட விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. விசாரணையின் போது அவர் அளித்த விவரங்கள் அறிக்கையாக தயாரிக்கப்பட்டுள்ளது. கமிஷனர் ஜார்ஜ் இந்த அறிக்கையை இன்னும் சில தினங்களில் டி.ஜி.பிக்கு அனுப்பி வைக்கிறார். அதன் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்கிடையே ஆபாச ஆடியோவில் சிக்கிய உதவி கமிஷனர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி அவதிப்பட்டார். அதிகாரிகள் மட்டத்தில் ஒரு சிலரிடம் போனில் பேசி தனது செயல்பாடுகளை குறிப்பிட்டு வருத்தப்பட்டார்.

இந்த நிலையில் அவர் தொடர்ந்து பணி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதால் விடுப்பில் சென்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிதம்பரத்தில் பெண் உள்பட 2 போலி டாக்டர்கள் கைது!!
Next post முன்னதாகவே நடிகையிடம் கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் செய்த நடிகர்!!