செஞ்சி அருகே ஏரியில் குவிந்து கிடந்த மண்டை ஓடுகளால் பரபரப்பு!!

Read Time:1 Minute, 18 Second

430657c7-d420-438d-9719-1803d403507a_S_secvpfசெஞ்சியை அடுத்த மேல்மலையனூரில் பெரிய பரப்பளவில் ஒரு ஏரி உள்ளது. அப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களில் பெரும்பாலானோர் இந்த ஏரியில் குளித்து விட்டு அம்மனை வழிபடுவார்கள்.
எனவே இந்த ஏரியில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். திடீரென இந்த ஏரியின் ஒரு பகுதியில் சுமார் 25 மனித மண்டை ஓடுகள் மற்றும் கை, கால்களின் எலும்புகள் குவிந்து கிடந்தன.

சற்று தொலைவில் திருஷ்டி பூசணிக்காய் ஒன்று உடைக்கப்பட்டு கிடந்தது. அதனை கண்ட பக்தர்கள் அதிர்ச்சியடைந்து ஓட்டம் பிடித்தனர். இந்த தகவல் பரவியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

எலும்பு கூடுகள் ஓடுகள் ஏரியில் கிடந்தது மாந்ரீகம் செய்பவர்களின் கைவரிசையாக இருக்கலாம் என தெரிகிறது. இதுபற்றி வளத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நரபலியிட கொண்டு சென்ற பெண் குழந்தை வழியில் அழுததால் கழுத்தை திருகி கொன்றவன் கைது!!
Next post சின்னக்கரை தர்காவில் கள்ளக்காதலியை அம்மிக்கல்லால் அடித்து கொல்ல முயற்சி: வாலிபர் கைது!!