ராணிப்பேட்டையில் இளம்பெண் பிணம் மீட்பு: போலீசார் தீவிர விசாரணை!!

Read Time:2 Minute, 57 Second

44d8484d-081b-4f60-a804-668e03df10c7_S_secvpfராணிப்பேட்டை சிப்காட் ஏரிக்கோடி பகுதியில் வசித்து வருபவர் தேசிங்குராஜன். இவருக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள். மகன் மூர்த்தி, மூத்த மகள் விஜயலட்சுமி ஆகியோருக்கு திருமணமாகி விட்டது.

இளைய மகள் அங்காளபரமேஸ்வரி(20) பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 17–ந்தேதி காலை வேலைக்கு சென்றவர். வீடு திரும்பவில்லை. அவரின் பெற்றோர் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு சென்று விசாரித்த போது 17–ந்தேதி மதியம் அனுமதி வாங்கி கொண்டு அங்காள பரமேஸ்வரி வீட்டுக்கு சென்று விட்டதாக கூறினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தெரிந்த இடங்களில் அங்காளபரமேஸ்வரியை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று சிப்காட்டில் ஒரு பாழடைந்த கிணற்றில் அங்காளபரமேஸ்வரி பிணமாக மிதந்தார்.

இதுகுறித்து அங்கிருந்தவர்கள் உடனடியாக சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி விரைந்து வந்து சிப்காட் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் அங்காள பரமேஸ்வரி உடலை மீட்டனர்.

வேலூர் தடயவியல் இயக்குனர் பாரி தடயங்களை சேகரித்தார். இதை தொடர்ந்து அங்காளபரமேஸ்வரியின் உடல் வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அங்காளபரமேஸ்வரியின் பெற்றோர் கூறுகையில்:– கடந்த 16–ந்தேதி மாலை வேலை முடிந்து வீட்டுக்கு வந்த அங்காள பரமேஸ்வரி, கம்பெனியில் வேலை செய்யும் வாலிபர் ஒருவர் தனக்கு காதல் செய்ய கூறி கடிதம் கொடுத்து மிரட்டுவதாக கூறி அழுதாள்.

மறுநாள் வேலைக்கு சென்று பாதியில் திரும்பி வந்துள்ளார். அதற்கு பிறகு கிணற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். என்று கூறி கதறி அழுதனர்.

இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்காள பரமேஸ்வரி சாவுக்கு என்ன காரணம் காதல் தகராறில் கொல்லப்பட்டாரா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ம.பி.யில் மார்புக்கு வெளியே இதயத்துடன் பிறந்த பெண் குழந்தை: உயிரை காப்பாற்ற அறுவை சிகிச்சை செய்ய தீவிரம்!!
Next post நரபலியிட கொண்டு சென்ற பெண் குழந்தை வழியில் அழுததால் கழுத்தை திருகி கொன்றவன் கைது!!