ம.பி.யில் மார்புக்கு வெளியே இதயத்துடன் பிறந்த பெண் குழந்தை: உயிரை காப்பாற்ற அறுவை சிகிச்சை செய்ய தீவிரம்!!

Read Time:2 Minute, 7 Second

e4104492-de23-431d-b384-bf6e9871d2de_S_secvpfமத்தியப்பிரதேச மாநிலம், டின்டோரி அருகே உள்ள லட்கோன் கிராமத்தை சேர்ந்த பெண்மணி ஒருவருக்கு கடந்த புதன்கிழமை பெண் குழந்தை ஒன்று பிறந்தது.

பசந்த பட்மாகர் என்பவரின் மனைவியான சுஷ்மா, அதிசய பெண் குழந்தையை புதன்கிழமை நண்பகல் அளவில் பெற்றெடுத்ததாக மருத்துவர் ஜி.கே சமத் தெரிவித்தார். அக்குழந்தையின் இதயமானது மார்புக்கு உள்ளே இல்லாமல், மார்புக்கு வெளியே காணப்படுகிறது. ஆனால் குழந்தையின் இதயம் நன்றாக துடிப்பதாக மருத்துவர் சமத் கூறியுள்ளார். எனினும் குழந்தையின் இதயத்தை மார்புக்கு உள்ளே வைத்து அதன் உயிரை காப்பாற்ற அறுவை சிகிச்சை செய்ய தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ஜபல்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அக்குழந்தை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பெண் குழந்தையின் தந்தை பட்மாகர் கூறுகையில், ‘கடவுள் குழந்தையுடன் எங்களை ஆசிர்வாதித்துள்ளார். ஆனால் அது ஆசிர்வாதமா? அல்லது சாபமா? என்பது எனக்கு தெரியவில்லை. நாங்கள் ஏழைகள். நாளொன்றுக்கு இரு வேளை உணவுகளை மட்டுமே உண்ணுகின்றோம். ஆனால் எனது குழந்தையை காப்பாற்ற நான் என்னவேண்டுமானாலும் செய்வேன். தற்போதைய சூழலில் உதவியற்றவர்களாக இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம் என்று வேதனையுடன் கூறினார்.

ஒரு மில்லியன் பிறப்புகளில் 8 குழந்தைகளுக்கு மட்டுமே இது போன்ற பாதிப்புகள் நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓடும் ரெயிலில் இருந்து பெண்ணை தள்ளிவிட்ட திருடன்!!
Next post ராணிப்பேட்டையில் இளம்பெண் பிணம் மீட்பு: போலீசார் தீவிர விசாரணை!!