ஓடும் ரெயிலில் இருந்து பெண்ணை தள்ளிவிட்ட திருடன்!!

Read Time:1 Minute, 42 Second

4e9836e8-45e1-46f6-bea5-b2a916352428_S_secvpfசத்தீஷ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்திலுள்ள உஸ்லாபூர் ரெயில் நிலையத்திலிருந்து, விசாகப்பட்டினம்-ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறிய சுனிதா என்ற பெண் தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் ஜோத்பூர் சென்று கொண்டிருந்தார்.

ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென சுனிதாவின் சத்தத்தைக் கேட்டு கணவர் நிலேஷ் ஜெயின் திடுக்கிட்ட போது, தனது மணி பர்சை பறித்துச் செல்ல முயன்ற திருடனுடன் சுனிதா போராடிக் கொண்டிருந்தார். சத்தம் கேட்டு மற்றவர்கள் வருவதற்குள் அந்த திருடன் சுனிதாவை கீழே தள்ளிவிட்டு தானும் குதித்தான்.

உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து ரெயிலை நிறுத்திய ஜெயின், ரெயிலிலிருந்து அவசரமாக கீழிறங்கி சக பயணிகளின் உதவியுடன் சுனிதாவை மீட்டார். கிழே விழுந்ததில், சுனிதாவின் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. ரெயில் மெதுவாகச் சென்றதால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை.

மாட்டிக்கொண்டால் உயிர் போய்விடும் என்ற பயத்தில் சுனிதாவிடமிருந்து திருடிய மணி பர்சுடன் திருடன் தப்பி ஓடிவிட்டான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரூ.3½ கோடி கஞ்சா எண்ணெயுடன் கேரள வாலிபர்கள் 2 பேர் கைது!!
Next post ம.பி.யில் மார்புக்கு வெளியே இதயத்துடன் பிறந்த பெண் குழந்தை: உயிரை காப்பாற்ற அறுவை சிகிச்சை செய்ய தீவிரம்!!