திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய்!!

Read Time:2 Minute, 47 Second

856908be-a3bd-4015-82f4-aa834e39a541_S_secvpfகொல்கத்தா நகரை சேர்ந்தவர் ஷகினா(30). கணவரை இழந்த இவர் தனது 3 ஆண் குழந்தைகளுடன் குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் மாவட்ட ஆஸ்பத்திரி வளாகத்தை ஒட்டியுள்ள லைன் பகுதியில் கடந்த 9 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.

அவரது மகன்களில் ஒருவனான சலிம் என்ற 12 வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் திருடிவிட்டதாக இன்று ஷகினா கேள்விப்பட்டார். பிழைக்கவந்த இடத்தில் நேர்மையாக வாழ வேண்டும். நான்கு வீடுகளில் வேலை செய்தோ, பிச்சை எடுத்தோ பசியாற்றிக் கொள்வதுதான் கவுரவம். திருட்டுத்தனம் செய்து வயிற்றை வளர்ப்பது படுகேவலம் என சராசரி ஏழை வர்க்கத்துக்கே சொந்தமான அந்த வைராக்கியமும், ரோஷமும் அவரை பிடுங்கித் தின்றது.

இந்த கோபத்தில் வீட்டில் கிடந்த இரும்புக் கம்பியை எடுத்து சலிமை மனம்போன போக்கில் அடித்தார். ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த சிறுவன் சில நிமிடங்கள் துடிதுடித்து, துவண்டுப்போய் இறந்து விட்டான்.

இதைக் கண்டு பதறிப்போன தாய், திருத்த முயன்று ஆத்திரத்தில் பெற்ற மகனையே அடித்துக் கொன்றுவிட்டோமே என மனம் வெதும்பினார். அதே வேளையில், இந்த கொலை சம்பவம் வெளியே தெரிந்தால் நம்மை சிறையில் போட்டு விடுவார்களே, தந்தை இல்லாத நமது இரண்டு பிள்ளைகளும் தாயும் இல்லாமல் அனாதையாக திண்டாடிப் போவார்களே என சிந்திக்க தொடங்கினார்.

உடனடியாக வீட்டில் கிடந்த ஒரு பெரிய சூட்கேஸை எடுத்து அதனுள் சலிமின் பிரேதத்தை திணித்தார். அருகாமையில் எங்காவது பிணத்தை புதைத்து விடலாம் என்ற நோக்கத்தில் சூட்கேஸை சுமந்து சென்ற ஷகினாவின் தோற்றத்தை கண்டு சந்தேகப்பட்ட அப்பகுதிவாசிகள் போலீசில் புகாரில் அளித்தனர்.

இதனையடுத்து, விரைந்து வந்த போலீசார் அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேனி மருத்துவ கல்லூரியில் பிரம்பை சுழற்றி மாணவர்களை வகுப்புக்கு விரட்டிய முதல்வர்!!
Next post செல்பி போட்டியில் முதல் பரிசு வென்ற இளம்வயது பெண் டாக்டர்!!