ஆபாச படம் காட்டி பள்ளிச் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது!!

Read Time:1 Minute, 53 Second

6607ad0e-22ab-4e57-95af-4f8e224034aa_S_secvpfமகாராஷ்டிரா கவுன்சிலின் விவசாய கல்வி மற்றும் ஆராய்ச்சி பொது இயக்குனராக பணியாற்றி வருபவர் சாவந்த்(வயது 58). ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், புனேயில் உள்ள சிவாஜி நகரில் வசித்து வருகிறார். இவர் ஹிங்கானே கர்டில் உள்ள தனது மாமனாரின் வீட்டிற்கு சென்று வருவது வழக்கம். அந்த வீட்டிற்கு அருகே உள்ள ‘ஹவுசிங் சொசைட்டி’ க்கு சொந்தமான பூங்காவில் அருகிலுள்ள பள்ளி சிறுமிகள் வந்து விளையாடுவர்.

அவர்களுக்கு பணம் மற்றும் சாக்லேட் கொடுத்து மாமனாரின் வீட்டிற்கு அழைத்துச்சென்ற சாவந்த் கம்ப்யூட்டரில் ஆபாச படங்களை காட்டி 4 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமிகள் இதை பள்ளி ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். அவர்கள், இச்சம்பவத்தை தலைமை ஆசிரியரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

பின்னர் உள்ளூர் கவுன்சிலர் மூலம் புனே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, சாவந்த் நேற்று கைது செய்யப்பட்டார். பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் உட்பட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. நேற்று மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்ட சாவந்த் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நரபலியிட கொண்டு சென்ற பெண் குழந்தை வழியில் அழுததால் கழுத்தை திருகி கொன்றவன் கைது!!
Next post ஐதராபாத்தில் துருக்கி நாட்டின் புதிய தூதரகம்: முதல் விசாவை பெறுகிறார் நடிகை லட்சுமி மஞ்சு!!