கல்லூரி மாணவரை தீர்த்துக்கட்டிய மதபோதகர்: போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!!
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள தடப்பள்ளி வாய்க்காலில் கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு வாலிபர் பிணம் மிதந்து வந்தது.
கோபி போலீசார் அந்த உடலை கைப்பற்றி கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி கோபி போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு:–
வாய்க்காலில் பிணமாக கிடந்தவர் டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் திருவள்ளுவர் வீதியை சேர்ந்த ராஜன் மகள் அருளாளன் (வயது 25) என்பது தெரியவந்தது. இவர் கோபியில் உள்ள கல்லூரியில் எம்.ஏ.முதலாமாண்டு படித்து வந்தார். அருளாளனுக்கு நன்கு நீச்சல் தெரியும். வாய்க்காலில் தவறி விழுந்திருந்தால் நீச்சல் அடித்து தப்பி இருக்கலாமே… என்று போலீசார் பார்வைக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் அதிரடி விசாரணையில் இறங்கினர்.
மாணவர் அருளாளன் கொங்கர்பாளையத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நேரம் கிடைக்கும் போது ஊழியராக பணிபுரிந்தார். இந்த ஆலயங்களில் மதபோதகராக இருந்தவர் பிராங்களின் பால் (37). இவரது மனைவி பெயர் கவுரி.
கிறிஸ்தவ ஆலயங்களில் சேவகம் செய்த போது அருளாளன் அடிக்கடி மதபோதகர் பிராங்களின் பால் வீட்டுக்கு சென்று வருவாராம். அப்போது அவருக்கும் மதபோதகர் மனைவி கவுரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. போக… போக இது கள்ளக்காதலாகவும் மாறியது.
ஒரு சமயம் கள்ளக்காதலர்கள் நெருங்கி இருந்த போது பார்த்துவிட்ட மதபோதகர் பிராங்களின்பால் ஆத்திரம் அடைந்தார். இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கவுரி கணவரை பிரிந்து கோவை சென்று விட்டார். கணவரிடம் விவாகரத்து கேட்டு உள்ளார். இந்த வழக்கு கோர்ட்டில் உள்ளது.
மனைவி பிரிந்து சென்றது மதபோதகர் பிராங்களின் பாலுக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டு அவரை காதலித்து வந்தார். அந்த பெண்ணை மாணவர் அருளாளனும் காதல் வலையில் வீழ்த்தி உள்ளார்.
மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றதும் அந்த பெண்ணை 2–வது திருமணம் செய்ய மதபோதகர் எண்ணி இருந்தார். ஆனால் அதே பெண்ணிடமும் மாணவர் அருளாளனும் காதல் லீலைகள் புரிந்து வந்ததை கண்டு கடும் கோபம் அடைந்தார்.
மனைவியிடம் உல்லாசம் அனுபவித்து என்னிடம் பிரிந்து சென்றதற்கு காரணமாக இருந்தவர் இப்போது தான் 2–ம் திருமணம் செய்ய உள்ள பெண்ணிடமும் பழகிறானே… இவனை இனியும் விட்டு வைக்கக்கூடாது… என்று சதி திட்டம் தீட்ட தொடங்கினார், பிராங்களின் பால்.
மாணவர் அருளாளன் மீது கொலைவெறியில் இருந்தாலும் அவரிடம் நல்லவன் போல் அன்புடன் மதபோதகர் பழகி வந்தார்.
தனது திட்டப்படி கடந்த 6–ந்தேதி டி.என்.பாளையத்துக்கு அருளாளனை வரவழைத்தார். சில மாணவர்கள் உடந்தையுடன் குளிர்பானத்தில் விஷம் கலந்து அருளாளனிடம் கொடுத்தனர். அதை குடித்த அருளாளன் ‘‘என்ன இந்த குளிர்பானம் ஒரு மாதிரியாக உள்ளதே..’’ ரொம்ப நாள் ஆகிவிட்டதா.. என்று கேட்டார்.
சிறிது நேரத்தில் வாந்தி எடுத்த அருளாளன் அங்கேயே மயங்கி விழுந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் மதபோதகர் பிராங்களின் பால் மகிழ்ச்சியுடன் அங்கு வேனுடன் வந்தார். மற்ற மாணவர்கள் உதவியுடன் அருளாளனை வேனில் ஏற்றினார். பிறகு கோபி நோக்கி வந்தனர். சிறிது நேரத்தில் அருளாளன் இறந்து விட்டார்.
வழியில் தடப்பள்ளி வாய்க்காலில் தண்ணீர் அதிகமாக செல்வதை கண்டு தண்ணீரில் போட்டால் தவறி விழுந்து இறந்திருப்பார் என போலீசார் கருதி விடுவார்கள் என எண்ணி அருளாளன் பிணத்தை வாய்க்காலில் வீசி விட்டு சென்று விட்டனர்.
பிறகு யாருக்கும் எதுவும் தெரியாததுபோல் அவரவர் வேலையை பார்க்க சென்று விட்டனர். போலீஸ் பிடியில் சிக்கமாட்டோம் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் போலீசாரின் அதிரடி விசாரணையில் அவர்கள் வசமாக சிக்கிக்கொண்டனர்.
மாணவர் கொலை வழக்கில் மதபோதகர் பிராங்களின்பால், மாணவர்கள் அருள் குமார்(18), நாகராஜ் (18), கார்த்திகேயன், வேன் டிரைவர் ஜான் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைதான மாணவர்கள் 3 பேரும் பொள்ளாச்சியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்.
கல்லூரி மாணவரை மதபோதகர் கொலை செய்த சம்பவம் கோபி மற்றும் ஈரோடு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating