பெங்களூர் அருகே ரெயில் விபத்தை தடுத்த 11 வயது சிறுவன்!!

Read Time:1 Minute, 38 Second

8ad99147-2ae6-43a5-b408-6fc419879620_S_secvpfமராட்டிய மாநிலம் யஷ்வந்த்பூரில் இருந்து கர்நாடக மாநிலம் ஹூப்ளிக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டு இருந்தது.

பெங்களூர் அருகே டி.சி.எம். டவுன்சிப் அருகே தண்டவாளம் உடைந்து கிடந்ததை அப்பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவன் பிரகாஷ் பார்த்து விட்டான். அந்த பாதையில் ரெயில் வருவதை அறிந்த அவன் அதனை நிறுத்த முடிவு செய்தான்.

உடனே தான் அணிந்து இருந்த சிவப்பு சட்டையை கழற்றி அசைத்தப்படி ரெயிலை நோக்கி தண்டவாளத்தில் ஓடி வந்தான். இதனை பார்த்த என்ஜீன் டிரைவர் உடனே ரெயிலை நிறுத்தினார்.

ரெயில் நின்றதும் தண்டவாளம் உடைந்து இருப்பதை சிறுவன் கூறினான். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த என்ஜீன் டிரைவர் ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

தண்டவாளம் சரி செய்த பின் ரெயில் புறப்பட்டு சென்றது.

சிறுவன் பிரகாஷ் ரெயிலை நிறுத்தாவிட்டால் பெரும் விபத்து ஏற்பட்டு உயிர் இழப்பும் நடந்து இருக்கும். அதனை பிரகாஷ் தடுத்து விட்டான்.

சிறுவனின் துணிச்சலான செயலை அதிகாரிகளும், பயணிகளும் பாராட்டினார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடுரோட்டில் நடந்த பிரசவத்தில் பிறந்த இரட்டை குழந்தைகள் சாவு: தாய் உயிர் ஊசல்!!
Next post திருப்பதியில் போலீஸ் என கூறி பெண்ணை கற்பழித்த 5 பேர் கைது!!