ஆஸ்திரேலியாவில் குத்திக் கொல்லப்பட்ட பெண்ணின் உடல் மங்களூரில் இன்று தகனம் செய்யப்பட்டது!!

Read Time:1 Minute, 54 Second

d0e153da-e409-4353-b73a-3238b16086fd_S_secvpfஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் ஐ.டி. துறையில் ஆலோசகராக பணியாற்றி வந்த பிரபா அருண் குமார்(41) அங்குள்ள பாராமட்டா பூங்கா வழியாக நடந்துவந்தபோது மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அதிகப்படியாக ரத்தம் வெளியேறியதால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் பிரேதப் பரிசோதனை முடிந்து பிரபாவின் சகோதரர் ஷங்கர் ஷெட்டியிடம் அவரது பிரேதம் ஒப்படைக்கப்பட்டது. ஷங்கரும் பிரபாவின் கணவரான அருண் குமாரும் விமானம் மூலம் அவரது உடலை நேற்றிரவு இந்தியாவுக்கு கொண்டு வந்தனர்.

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் அவரது உடல் இன்று இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இன்று காலை கர்நாடக உள்துறை மந்திரி ஜார்ஜ், மத்திய மந்திரிகள் அனந்த்குமார், சதானந்த கவுடா உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், மங்களுரில் உள்ள பிரபாவின் சொந்த ஊரான அம்தூர் கிராமத்துக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கும் ஏராளமான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. மாலை சுமார் 6 மணியளவில் அவரது சிதைக்கு கணவர் அருண் குமார் தீ மூட்டினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முன்னாள் மந்திரி மீது வேலைக்கார சிறுமி போலீசில் பாலியல் புகார்!!
Next post சிகிச்சைக்கு வந்த பெண்ணை கற்பழித்த டாக்டருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை!!