பெங்களூருவில் குடும்பத்தினர் 5 பேரை கொன்றுவிட்டு வாலிபர் தற்கொலை!!

Read Time:3 Minute, 49 Second

ad37d879-b011-48f4-a70c-0ed4c4dd35b4_S_secvpfபெங்களூரு நாகரபாவி எம்.பி.எம். லே-அவுட், 3-வது மெயின் தெருவில் வசித்து வந்தவர் கங்கஹனுமய்யா(வயது 57). புதிதாக கட்டிய 2 மாடி கட்டிடத்தில் அவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் ஊழியராக பணி புரிந்து வந்தார். இவரது மனைவி ஜெயம்மா(55), மகள்கள் ஹேமலதா(30), விமலா (28) நேத்ராவதி (23), மகன் யத்தீஷ் (25). இவர்களில் ஹேமலதா கம்ப்யூட்டர் என்ஜினீயராக ஒரு தனியார் நிறுவனத்திலும், விமலா ரெயில்வே துறையில் ஊழியராகவும் வேலை செய்து வந்தனர்.

நேத்ராவதி தனியார் கல்லூரி ஒன்றில் என்ஜினீயரிங் படித்து வந்தார். யத்தீஷ் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வீட்டில் இருந்தார். கடந்த 9-ந் தேதி காலை பக்கத்துவீட்டு பெண் ஒருவரிடம் பேசிச்சென்ற ஜெயம்மா பின்னர் வெளியில் வரவே இல்லை. 3 நாட்களாக இவர்களது வீடு பூட்டியே கிடந்தது. முதல் மாடியில் வாடகைக்கு குடியிருந்தவர் கங்கஹனுமய்யாவின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் இதுகுறித்து ஞானபாரதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் விரைந்து வந்து வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு கங்கஹனுமய்யா, அவரது மனைவி ஜெயம்மா மகள்கள் ஹேமலதா, விமலா மற்றும் நேத்ராவதி ஆகியோர் தரையிலும், படுக்கையிலும் பிணமாக கிடந்தனர். யத்தீஷ் மட்டும் மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார். உடல்கள் அழுகிய நிலையிலும் இருந்தன. இதைக்கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் இருந்த உணவுப்பொருட்கள், அங்கு பதிவாகியிருந்த கைரேகைகள் மற்றும் தடயங்களையும் சேகரித்தனர். தகவல் அறிந்து கங்கஹனுமய்யாவின் உறவினர்களும், அந்த பகுதியில் இருந்தவர்களும் அங்கு திரண்டனர். போலீசார் 6 பேர்களின் உடல்களை அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் யத்தீஷ் தனது தாய்-தந்தை, 3 சகோதரிகளுக்கு சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்து கொன்றுவிட்டு, பின்னர் தானும் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

யத்தீஷ் எதற்காக தனது குடும்பத்தினரை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவில்லை. இதுகுறித்து ஞானபாரதி போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தில் 6 பேர் பலியான சம்பவம் சுற்றுவட்டார பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமண வீட்டில் மணமகனின் சகோதரர் அடித்துக்கொலை: வாலிபர் கைது!!
Next post உலக நாடுகள் முடியாதென்று கைவிட்ட அரியவகை கல்லீரல் அறுவை சிகிச்சை: வெற்றிகரமாக நடத்திக் காட்டிய இந்தியா!!