சித்தூர் அருகே மின்கம்பிகள் உரசியதால் லாரியில் தீப்பிடித்து விபத்து: டிரைவர் பலி!!

Read Time:2 Minute, 3 Second

4589cdda-6276-4720-a048-cef6532131c0_S_secvpfசித்தூர் மாவட்டம் கொலகலாரெட்டி வாரிபல்லி கிராமத்தில் வசிக்கும் விவசாயி ஒருவருக்கு போர்வெல் அமைப்பதற்காக தனியார் போர்வெல் லாரி வரவழைக்கப்பட்டது. லாரியை நாமக்கல் மாவட்டம் கருமா கவுண்டம்பாளையத்தை சேர்ந்த கந்தசாமி (60) என்பவர் ஓட்டினார்.

போர்வெல் லாரி கிராமத்திற்குள் சென்ற போது சாலையின் இருபுறமும் உள்ள மின்சார கம்பிகள் மீது உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்ததில் லாரி தீப்பிடித்தது.

தீ மளமளவென பரவியதால் லாரியின் டயர்கள் வெடித்து சிதறின. டீசல் டேங்கும் வெடித்ததால் டிரைவர் கந்தசாமி லாரியில் இருந்து இறங்க முடியவில்லை. இதனால் லாரியிலேயே உயிரோடு எரிந்து பலியானார். மேலும் பணியாளர்கள் ஜித்தேந்ரகுமார் (19), ராஜூ (21), ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சித்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்

தகவலறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்து தீயை அணைத்தனர். பின்னர் டிரைவர் கந்தசாமி பிணத்தை மீட்டு சித்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சித்தூர் சப்–இன்ஸ்பெக்டர் ஆதிநாராயணா வழக்குப் பதிவு செய்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார் .இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்யது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கதாநாயகிகள் நிலைமை பரிதாபம்….!!
Next post முத்தம் கொடுத்தா காசு அதிகம்…!!