கிழக்கு மாகாண சபையில், புதிய சம்பந்திகள்! – ஏ.எல்.நிப்றாஸ் (கட்டுரை)!!

Read Time:28 Minute, 10 Second

timthumb (3)கல்­யாண சந்­தையில் டாக்டர் போன்ற உயர் பட்­டம்­பெற்ற மாப்­பிள்­ளை­க­ளுக்கு கொழுத்த சீத­னத்­துடன் வரன்கள் வரும். அப்­ப­டி­யா­ன­வர்­களை மாப்­பிள்­ளை­யாக்கி விட­வேண்டும் என்ற தீராத வேட்­கை­யோடு ஊருக்குள் சில காசுக்­கா­ரர்கள் காத்திருப்­பார்கள்.

ஒரு இடத்தில் இருந்­து­வரும் சீத­னத்தை வாங்கி மாப்­பிள்ளை தனக்­கி­ருக்­கின்ற காசுத் தேவையை எல்லாம் நிறை­வேற்­றிய பிற்­பாடு அதை­விட கொழுத்த சொத்து செல்­வங்­க­ளோடு இன்­னு­மொரு சம்­பந்தம் வீடு­தேடி வரும்.

அப்­போது புதி­தாக மாப்­பிள்ளை கேட்­டு­வந்த இடத்­தி­லி­ருந்து அதிக பணத்தை வாங்கி முன்னர் வாக்­க­ளித்த சம்பந்தக்காரர்களது சீத­னத்தை திருப்பிக் கொடுத்து விடும் மாப்­பிள்­ளைகள் நிறை­யப்­பேரை கண்­டி­ருக்­கின்றோம்.

முத­லா­வ­தாக வாக்­கு­றுதி அளிக்­கப்­பட்ட பெண் வீட்­டா­ருக்கு கவ­லையும் வெட்­கமும் பிடுங்கித் தின்னும். ஊரில் காண்­கின்ற எல்­லோ­ரி­டமும் அந்த மாப்­பிள்ளை தம்மை நம்ப வைத்து கழுத்­த­றுத்து விட்­ட­தாக சொல்லித் திரி­வார்கள்.

சிலபேர் மண்ணள்ளி வீசி சாபம் விட்­டு­விட்டுப் போவார்கள்.

ஆனால், இன்­னு­மொரு வகை இருக்­கின்­றது. இவ்­வா­றான ஒரு மாப்­பிள்ளை ஏதோ ஒரு கார­ணத்­திற்­காக தமக்கு வந்த ஒரு வரனை ஆரம்­பத்­தி­லேயே நிர­ாக­ரித்­தி­ருப்பார். அவர்­க­ளுக்குள் எந்­த­வித கொடுக்கல் வாங்­கலும் இடம்­பெற்­றி­ருக்­காது.

ஆனால், ஊருக்குள் அந்த டாக்டர் மாப்­பிள்­ளைக்கு கல்­யா­ணமாம் இன்னார் சம்­பந்தி ஆகு­கின்­றார்­களாம் என்று பர­வ­லாக பேசப்­படும் நேரம் வரும்­போது, நிரா­க­ரிக்­கப்­பட்ட பெண்ணின் வீட்டார் அவன் எங்கள் வீட்டில் கல்­யாணம் முடிப்­ப­தற்கு முடிவு தந்­தி­ருந்தான்.

கொடுக்கல் வாங்­கலும் இடம்­பெற்­றது. இப்­போது ஏமாற்றி விட்டான். அவனும் அவன்ட குடும்­பமும் சரி­யில்லை என்று வசை­பாடித் திரி­வார்கள், அந்த மாப்­பிள்ளை குடும்­பத்­து­ட­னான சம்­பந்தம் கைகூ­ட­வில்­லையே என்ற வேக்­காடு அவர்­க­ளது பேச்சில் தொனிக்கும்.

இவ்­வாறு நடந்து கொள்­ப­வர்­களால் புதிய சம்­பந்­தி­க­ளுக்கு சொல்லிக் கொள்­ளும்­ப­டி­யான பாதிப்­புகள் ஏற்­பட்டு விடுவதில்லை.

கிழக்கு மாகா­ணத்­திற்கு முத­ல­மைச்சர் நிய­ம­னத்­திற்கும் ஆட்­சி­ய­மைப்­பிற்கும் முன்­பின்­னாக இடம்­பெற்ற நிகழ்­வு­களை ஒரு கோர்­வை­யாக நோக்­கு­கின்ற போது மேலே சொன்ன சம்­பந்தம் பேசுதல் பற்­றிய கதைகள் நினை­வுக்கு வரு­வதை தடுக்கமுடிய­வில்லை.

ஆட்­சிக்­கான பிர­ளயம்

கிழக்கு மாகாண சபையில் ஆட்­சியை மீள நிலை­நி­றுத்­து­வதில் ஒரு பிர­ள­யமே ஏற்­பட்டுப் போயிற்று.

தேசிய அர­சி­யலில் மஹிந்த ராஜ­ப­க் ஷவை பத­வி­யி­றக்கி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை அரி­யா­சனம் ஏற்­றும்­போது மக்களிடையே ஏற்­பட்­டி­ருந்த எதிர்­பார்ப்பும் அங்­க­லாய்ப்பும் கிழக்கின் ஆட்­சி­ய­தி­கா­ரத்தை உறு­திப்­ப­டுத்­து­வ­திலும் காணப்பட்டது.

இம் மாகா­ணத்தின் ஆட்சி என்­பது கிட்­டத்­தட்ட சிறு­பான்மை சமூ­கத்­தி­டமே கையளிக்­கப்­பட்டு விட்­டாலும் கூட, இரு சிறுபான்மை இனங்­களும் தமக்­கி­டையே அதி­கா­ரத்தை எவ்­வாறு பகிர்ந்து நுகர்­வது என்­பதில் நீண்­ட­தொரு இழு­பறி நிலை இருந்­தது.

கிழக்கு மாகா­ணத்தில் ஆட்­சி­ய­மைப்­ப­தற்­கான அறுதிப் பெரும்­பான்­மையை ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியோ, தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்போ, ஐக்­கிய தேசியக் கட்­சியோ அல்­லது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸோ பெற்­றி­ருக்­க­வில்லை.

ஐ.ம.சு.மு. அர­சாங்­கத்­திடம் மு.கா. முன்னர் செய்து கொண்ட ஒப்­பந்­தத்தின் பிர­காரம் கிழக்கில் முத­ல­மைச்­சரை சுழற்சி அடிப்­ப­டையில் மாற்­றி­ய­மைப்­பது மட்­டுமே தேவை­யாக இருந்­தது.

மு.கா.வுக்கு முத­ல­மைச்சை கொடுத்­து­விட்டு மீத­மி­ருக்­கின்ற எல்லா பத­வி­க­ளையும் முன்னர் இருந்­தது போலவே வைத்துக் கொள்­ளலாம் என்று ஐ.ம,சு.மு. உறுப்­பி­னர்கள் எண்­ணினர்.

ஆனால் தேசிய அர­சி­யலில் ஏற்­பட்ட எதிர்­பா­ராத மாற்றம் பிராந்­திய ஆட்­சி­ய­தி­கா­ரத்­திலும் கட்­ட­மைப்பு ரீதி­யி­லான மாற்றமொன்றை மறை­மு­க­மாக ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

இம்முறை கிழக்கில் ஆட்­சி­ய­மைப்­ப­தற்­கான முக்­கிய பேசு­பொ­ரு­ளா­கவும் பேரப் பொரு­ளா­கவும் முத­லை­மைச்சர் பத­வியே இருந்­தது.

கடந்த முறை இம் மாகா­ணத்தில் ஆட்­சி­ய­மைப்­ப­தற்­காக முன்­வந்த த.தே.கூட்­ட­மைப்பின் கரங்­களை உத­றித்­தள்­ளிய மு.கா.இம்­முறை அக்­கட்­சியின் ஆத­ரவை கோரி நின்­றது.

ஆனால் நியா­ய­பூர்­வ­மாக தமக்கே முத­ல­மைச்சு கிடைக்க வேண்டும் என்­பதில் மட்டும் மு.கா. உறு­தி­யாக இருந்­தது. இதனால் த.தே. கூட்­ட­மைப்­பு­ட­னான பேச்­சுக்கள் ஆரம்­பத்தில் வெற்­றி­ய­டை­ய­வில்லை.

இந்­நி­லையில், ஏற்­க­னவே கிழக்கில் ஆட்­சி­ய­தி­கா­ரத்தில் முக்­கிய இடம்­பி­டித்­தி­ருந்த ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணிக்கு தொடர்ந்தும் ஆட்­சியில் தமது இடத்தை தக்க வைத்துக் கொள்­வது அவ­சி­ய­மாக இருந்­தது.

அது­த­விர மு.கா.வுக்கு சுழற்சி முறையில் முத­ல­மைச்சை தரு­வ­தற்கு ஏற்­க­னவே உடன்­பட்ட கட்­சியும் அதுதான் என்­பதால் மு.கா.வுக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தற்கு ஐ.ம.சு.மு. உறுப்­பி­னர்கள் முன்­வந்­தனர்.

அக்­கட்­சியின் மேல்­மட்­டத்­தினர் மற்றும் மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளுடன் இது தொடர்­பான சந்­திப்­புக்கள் இடம்­பெற்­றன. இதன்­படி கிழக்கில் மு.கா.வுக்கு முத­ல­மைச்­சரை வழங்­கு­வ­தற்கும் இணைந்து ஆட்­சி­ய­மைப்­ப­தற்கும் 14 உறுப்­பி­னர்கள் சத்­தி­யக்­க­ட­தாசி ஊடாக இணக்கம் தெரிவித்­தனர்.

இந்த ஆத­ரவின் பக்க பலத்­தோ­டுதான் முத­ல­மைச்­ச­ராக நஸீர் அகமட் நிய­மிக்­கப்­பட்டார். அது­மட்டுமின்றி பல மாதங்­க­ளாக நிறை­வேற்­றப்­ப­டா­தி­ருந்த வர­வு­செ­லவுத் திட்டமும் நிறை­வேற்­றப்­பட்­டது.

தவிர, முத­ல­மைச்­சரை நிய­மிப்­ப­தற்கு த.தே.கூட்­ட­மைப்பு இணக்கம் தெரிவிக்­கவும் இல்லை . ஆத­ரவு வழங்­கவும் இல்லை. ஆனால் நஸீர் அகமட் முத­ல­மைச்­ச­ரான பின்னர் மு.கா. தலைவர் ரவூப் ஹக்­கீ­முக்கு ஒரு புதிய யோசனை உதித்­தது.

அதா­வது கிழக்கு மாகா­ணத்தில் தேசிய அர­சாங்கம் அல்­லது ஐக்­கிய மாகாண ஆட்­சியை நிறு­வு­வ­தற்­கான தனது விருப்பத்தை அவர் வெ ளியிட்டு எல்லாக் கட்­சி­களின் ஆத­ர­வையும் கோரினார்.

இதன்­மூலம் அவர் பிர­தா­ன­மாக இலக்கு வைத்­தது தமிழ்த்தேசியக் கூட்­ட­மைப்பின் ஆத­ர­வை­யாகும். ஆனால் தேசிய அரசாங்­கத்தில் பங்­கா­ளி­யா­வது என்றால் த.தே.கூ. உள்­ளிட்ட எல்லாக் கட்­சி­க­ளுக்கும் பத­விகள் தேவைப்­பட்­டது.

இதில் ஆச்­ச­ரியம் எது­வு­மில்லை.

ஒரு­வாறு தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு 2 அமைச்சுப் பத­வி­க­ளையும் பிரதித் தவி­சாளர் பத­வி­யையும் பெற்றுக் கொண்டு கிழக்கின் தேசிய அர­சாங்­கத்தில் பங்­கா­ளி­யா­வ­தற்கு முன்­வந்­தது.

முத­ல­மைச்­சரை தரு­மாறு கேட்டுக் கொண்­டி­ருந்த த.தே.கூட்­ட­மைப்பு தனது பிடி­வா­தத்­தி­லி­ருந்து இறங்கி வந்து அமைச்சுக்களை பெற தீர்­மா­னித்­தாலும், ஐ.ம.சு.முன்­னணி மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளி­ட­மி­ருந்து வேறொரு சிக்­கலை மு.கா. எதிர்­கொள்ள வேண்டி ஏற்­பட்­டது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு அமைச்­சுக்கள் பிரித்து கொடுக்­கப்­ப­டு­மாயின் தமது கட்­சிக்கு வழங்­கப்­படும் அமைச்சுக்களின் எண்­ணிக்கை குறை­வ­டையும் என்­பதால் இந்த நகர்வை அவர்கள் விரும்­ப­வில்லை.

ஐ.ம.சு.மு.க்கு ஏமாற்றம்

இவ்­வா­றான நிலையில், த.தே.கூ.உறுப்­பி­னர்கள் இருவர் அமைச்­சர்­க­ளாக பத­வி­யேற்­றதால் ஐ.ம.சு.மு.உறுப்­பி­னர்­களின் சந்­தேகம் உறு­தி­யா­னது.

தமது கட்­சிக்கு ஒரே­யொரு மாகாண அமைச்சே கிடைக்கும் என்­பதும் முன்னர் அமைச்­சர்­க­ளாக பதவி வகித்துக் கொண்டிருந்த விம­ல­வீர திசா­நா­யக்க மற்றும் உது­மா­லெப்பை ஆகிய இரு­வரில் ஒருவர் அல்­லது இரு­வ­ருக்­குமே அமைச்சு கிடைக்­காது என்­பதும் நிரூ­ப­ண­மா­கி­யது.

இதனால் ஆத்­தி­ர­முற்ற மேற்­படி இருவர் உள்­ளிட்ட உறுப்­பி­னர்கள் சிலர் முஸ்லிம் காங்­கிரஸ் தமக்­க­ளித்த வாக்­கு­று­தியை மீறு­வ­தாக பகி­ரங்­க­மாக அறி­வித்­தனர்.

தமது கட்­சி­யுடன் நடத்­தப்­பட்ட பேச்­சுக்­களில் முத­ல­மைச்சு பத­வியை மு.கா.வுக்கு வழங்­கவே தீர்­மா­னிக்­கப்­பட்­டது என்றும் 2 அமைச்­சுக்­களை தமது கட்­சிக்கு தொடர்ந்து வழங்க மு.கா. உடன்­பட்­ட­தா­கவும் மீத­மி­ருக்கும் அமைச்­சுக்­களை பகிர்­வது தொடர்பில் கலந்து பேசு­வது என்று தீர்­மா­னிக்­கப்­பட்­ட­தா­கவும் ஐ.ம.சு.மு.வின் மேற்­படி மாகாண உறுப்­பி­னர்கள் தெரிவித்தனர்.

இவ்­வா­றான ஒரு உடன்­பாடு இருக்­கத்­தக்­க­தாக த.தே.கூட்­ட­மைப்­புக்கு இரு அமைச்­சுக்­களை வழங்க முன்­வந்­தமை ஒப்பந்தத்தை மீறும் நய­வஞ்­ச­கத்­தனம் என அவர்கள் விமர்­சித்­தனர்.

முன்­ன­தாக முன்னாள் அமைச்சர் சுசில் பிரேம்­ஜ­யந்த, மு.கா. தமிழ்த்தேசியக் கூட்­ட­மைப்­பிற்கு இடை­யி­லான உறவை ஆட்சே­பித்­தி­ருந்தார்.

ஆனால், அவ்­வாறு எந்த உடன்­பாடும் எட்­டப்­ப­ட­வில்லை என்றும் முத­ல­மைச்சை மு.கா.வுக்கு தரு­வது தொடர்பில் மட்டுமே பேசப்­பட்­ட­தா­கவும் மு.கா. செய­லாளர் நாயகம் மிக உறு­தி­யாக தெரிவித்தார்.

இது­வெல்லாம் நடை­பெற்றுக் கொண்­டி­ருந்த போது ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் ஆரி­ய­வதி கலப்­ப­தியும் தமிழ் கூட்­ட­மைப்பை சேர்ந்த இரு­வரும் அமைச்­சர்­க­ளாக சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்­தனர்.

இதனால் ஆத்­தி­ர­ம­டைந்த ஐ.ம.சு.மு. உறுப்­பி­னர்கள் ஆறுபேர் மு.கா. ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு தாம் வழங்­கிய ஆத­ரவை வாபஸ் பெறு­வ­தாக அறி­வித்­தனர்.

அதன் பின்னர் சி. சந்­தி­ர­காந்தன் உள்­ளிட்ட மேலும் இரு­வரும் வாபஸ் பெற்றோர் பட்­டி­யலில் இணைந்து கொண்­டனர். அது­போ­தாது என்று தமிழ்த்தேசியக் கூட்­ட­மைப்­புடன் சேர்ந்து ஆட்­சி­ய­மைக்கும் முயற்­சி­யையும் மேற்­கொண்­டனர்.

எல்­லோரும் சென்று இரா. சம்­பந்­தனை சந்­தித்து இதற்­கான விருப்­பத்தை வெ ளியிட்­டனர்.

ஆனால் ஐ.ம.சு. முன்­ன­ணியின் 6 உறுப்­பி­னர்­களும் தமிழ் கூட்­ட­மைப்பும், மு.கா. உறுப்­பி­னர்­களும் தம்­பக்கம் இருக்­கின்­றார்கள் என்ற தைரி­யத்தில், எவ்­வித பதற்­றமோ சல­னமோ இல்­லாமல் மு.கா. கிழக்கில் கூட்­டாட்­சியை அமைத்­தது.

ஆட்­சி­ய­மைப்­பதை தடுப்­ப­தற்கு கடைசிக் கட்­டத்தில் ஐ.ம.சு.மு.வின் அதி­ருப்தி அணி­யினர் மேற்­கொண்ட தந்திரோபாயங்கள் எதுவும் பலிக்­காமல் போவதே விதி­யென்­றா­கிற்று. அதற்கு பல கார­ணங்கள் இருந்­ததை குறிப்­பிட்­டாக வேண்டும்.

பிழை­யான நகர்­வுகள்

கிழக்கில் ஆட்­சி­ய­மைப்­ப­தற்­கான அணு­கு ­மு­றையும் தந்­தி­ரோ­பாய நடை­மு­றை­களும் கவ­னிப்­பிற்­கு­ரி­யன. முத­லா­வ­தாக முஸ்லிம் காங்­கி­ரஸும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியும் ஒப்­பந்­த­மொன்றை செய்து அதன்­படி ஐ.ம.சு.மு.வுக்கு 2 அமைச்­சுக்கள் தரு­வ­தாக உறு­தி­ய­ளித்­தி­ருந்தால் அதனை மீறி­யி­ருக்கக் கூடாது என்­பதை மறுப்­ப­தற்கு இல்லை.

அவ்­வாறு ஒப்­பந்தம் எதுவும் மேற்­கொள்­ள­வில்லை என்றால், இரு­த­ரப்பு சந்­திப்­புக்­களில் பேசப்­பட்ட விட­யங்­க­ளுக்கு தாமாக ஒரு அர்த்­தத்தை நினைத்துக் கொண்டு அத­னையே ஒப்­பந்தம் என்று கூறித்­தி­ரியக் கூடாது. வங்­கு­ரோத்து அர­சி­யலின் வெளிப்­பா­டா­கவே இதனை வெளியு­லகம் கருதும்.

இவ்­வாறு இரு­த­ரப்­பி­னரும் ஒப்­பந்தம் தொடர்பில் முரண்­பட்ட கருத்தை வெளிப்­ப­டுத்­தி­ய­மைக்கு முழு­முதற் காரணம் அந்த ஒப்­பந்தம் மக்கள் மயப்­ப­டுத்­தப்­ப­டாமை ஆகும்.

பேச்­சு­வார்த்­தையின் போது இணக்கம் காணப்­பட்ட விட­யங்­களை அல்­லது ஒப்­பந்­தத்தை எழுத்து வடிவில் வைத்திருந்திருந்தால் இப் பிரச்­சி­னையை சட்ட ரீதியாக அணு­கி­யி­ருக்க முடியும்.

அவ்­வா­றின்றி பகி­ரங்­க­மாக வெ ளிட்­டி­ருந்தால் மக்கள் ஒரு சாட்­சி­யாக இருந்து பாதிக்­கப்­பட்ட தரப்­பிற்­காக குரல் கொடுத்திருப்­பார்கள். ஆனால் இவ்­வாறு எந்த ஆதா­ரமும் இல்­லாமல் போன­தா­லேயே அதி­ருப்தி அணி­யி­னரின் நகர்­வுகள் வெற்­றி­ய­ளிக்­க­வில்லை.

ஐ.ம.சு.மு. அதி­ருப்தி அணி­யினர் தமது ஆத­ரவை விலக்கிக் கொண்ட பின்­னரும் அதனை மு.கா. பெரிதாக அலட்டிக் கொள்ள­வில்லை.

இது அதி­ருப்­தி­யா­ளர்­க­ளுக்கு பெரும் தன்­மானப் பிரச்­சி­னை­யாகப் போயி­ருக்க வேண்டும். எனவே இதற்கு முன்னர் ஒரு­போதும் சிந்­தித்­தி­ராத ஒரு கோணத்தில் சிந்­தித்­தனர்.

அதன்­படி, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் சேர்ந்தேனும் ஆட்­சி­ய­மைப்­பதன் மூலம் முஸ்லிம் காங்­கி­ர­ஸிற்கு பாடம் ­பு­கட்ட அவர்கள் எண்­ணினர். கடைசி முயற்­சி­யாக தமிழ்த்தேசியக் கூட்­ட­மைப்புத் தலைவர் இரா. சம்­பந்­தனை சந்­தித்து ஆட்­சி­ய­மைப்­பது குறித்து பேசினர்.

அப்­போது மாகாண அமைச்­சர்­க­ளாக இருந்த இரு­வரும் முன்னாள் முத­ல­மைச்சர் சந்­தி­ரக்­காந்தன் உள்­ளிட்ட பலர் இக்குழுவில் உள்­ள­டங்­கி­யி­ருந்­தனர்.

இவர்­களின் முகத்­தெ­திரே மறுப்புத் தெரிவிக்க முடி­யாது என்­ப­தாலோ என்­னவோ, கலந்து பேசி­விட்டு சொல்­வ­தாக சம்­பந்தன் எம்.பி. சொல்­லி­ய­னுப்­பினார்.

அவர்கள் வீடு­வந்து சேரும் முன்­னரே மாகாண சபைக்கு தமது கட்சி சார்பில் நிய­மிக்­கப்­படும் அமைச்­சர்­களின் பெயரை அறிவித்து த.தே.கூட்­ட­மைப்பு தமது ஆத­ரவை மீள உறு­திப்­ப­டுத்­தி­யமை அக் குழு­வி­ன­ருக்கு ஒரு­வேளை அதிர்ச்சி வைத்­தி­யாக அமைந்­தி­ருக்­கலாம்.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்னணியின் அதி­ருப்தி அணி­யினர் சம்­பந்­தனை சந்­திக்கச் செல்லும் முன்னர் சில விட­யங்­களை யோசித்­தி­ருக்க வேண்டும்.

அதா­வது, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஒரு­போதும் ஐ.ம.சு.மு.வுடன் இணைந்து கிழக்கில் ஆட்­சி­ய­மைக்­காது. அப்­படி ஆட்சி­ய­மைத்­தாலும் முத­ல­மைச்சுப் பத­வியை கூட்­ட­மைப்­புக்கு வழங்க சிங்­கள ஆட்சிச் சூழல் விரும்­பாது.

ஐ.ம.சு.மு.வுடன் சேர்ந்தாலும் 2 அமைச்­சுக்­கள் தான் தமிழ் த்தேசியக் கூட்­ட­மைப்­புக்கு கிடைக்கும்.

எனவே, ஐ.ம.சு.மு.வுடன் சேர்ந்து மு.கா. கடந்­த­ முறை ஆட்­சி­ய­மைத்­ததை இப்­போதும் விமர்­சித்து வரு­கின்ற த.தே.கூட்டமைப்பு மு.கா.வுடன் முரண்­பட்டுக் கொண்டு ஐ.ம.சு.மு.வுடன் புதிய உறவை ஏற்­ப­டுத்திக் கொள்ள விரும்­பவே விரும்­பாது. அதற்­கான நிகழ்­த­க­வு­களும் இல்­லவே இல்லை.

அதேபோல் ஐ.ம.சு.மு.வில் அங்கம் வகிக்கும் ஏனைய 6 உறுப்­பி­னர்­க­ளி­னதும் செயற்­பா­டு­க­ளையும் குறிப்­பாக பரிசீலித்திருக்க வேண்டும்.

முன்னாள் அமைச்­சர்­க­ளான விம­ல­வீ­ர­தி­சா­நா­யக்க, எம்.எஸ்.உது­மா­லெப்பை போறோர் ஐ.ம.சு.மு.விற்கு இன்­னு­மொரு அமைச்சு தர­வேண்டும் என்று அறிக்கை விட்டுக் கொண்­டி­ருக்க மறு­பு­றத்தில், ஆரி­ய­வதி கலப்­பதி எந்­த­வித தாம­தமும் இன்றி அமைச்­ச­ராக சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்து கொண்டு கட­மை­க­ளையும் பொறுப்­பேற்றார்.

kudamaipuஐ.ம.சு.மு. மாகாண சபை உறுப்­பி­னர்கள் எல்­லோரும் தமது பக்­கத்தில் இல்லை என்­பதை புரிந்து கொள்ள இது போது­மா­னது.

ஆரி­ய­வ­திக்கு கிடைத்த அமைச்­சிற்கு மேல­தி­க­மாக இன்­னு­மொரு அமைச்சு ஐ.ம.சு.முன்­ன­ணிக்கு கிடைக்­கின்­றது என்றால் அந்த அமைச்சு எம்.எஸ்.உது­மா­லெப்­பைக்கு வழங்­கு­வ­தற்­கான சாத்­தி­யங்­களே அதி­க­மி­ருந்­தன.

சிங்­க­ளவர் ஒருவர் ஏற்­க­னவே அமைச்­ச­ரா­கி­விட்டார். இந்­நி­லையில் உது­மா­லெப்­பைக்கு ஒரு அமைச்சை பெற்றுக் கொடுப்­ப­தற்கும் அதற்­காக அதி­ருப்தி அணிக்கு ஆத­ர­வ­ளிப்­ப­தற்கும் ஐ.ம.சு.முன்­ன­ணி­யி­லுள்ள சிங்­கள மேலா­திக்க எண்­ண­முள்ளோர் விரும்­பி­யி­ருக்க மாட்­டார்கள் என்ற சந்­தேகம் ஒன்று உள்­ளது.

மாற்­றாந்தாய் மனப்­பாங்­குடன் ஐ.ம.சு,மு. சிங்­கள அர­சி­யல்­வா­திகள் இவ்­வி­ட­யத்தை கையா­ள­வில்லை என்று யாரா­வது வக்­கா­ளத்து வாங்­கக்­கூடும்.

அப்­ப­டி­யென்றால் உண்­மையில் 2 அமைச்­சுக்கள் தரு­வ­தாக மு.கா. உடன்­பட்டு பின்னர் அதனை மீறி­யி­ருந்தால், ஒன்றில் எல்லா உறுப்­பி­னர்­களும் தமது சத்­தியக் கட­தா­சியை வாபஸ் பெற்­றி­ருக்க வேண்டும்.

அல்­லது வாபஸ் பெற்ற உறுப்­பி­னர்கள் மு.கா. 2 அமைச்­சுக்கு உடன்­பட்­ட­தாக கூறு­வது பொய்­யாக இருக்க வேண்டும். இவ்­வி­ரண்டு அணு­கு­மு­றை­களும் கையா­ளப்­ப­டாமை மேற்­கூ­றிய சந்­தே­கத்தை வலுப்­ப­டுத்­து­கின்­றது.

தேசிய அர­சாங்கம்?

குறிப்­பாக கட்சி மாறுதல், முடி­வு­களை திடு­தி­டுப்­பென மாற்­றுதல், ஒரு கட்­சி­யிடம் இருந்த ஏதா­வது ஒன்றை பெற்றுக் கொள்வ­தற்­காக எதி­ர­ணிக்கு மாறப்­போ­வ­தாக அறிக்கை விடுதல் போன்ற நகர்­வு­களில் முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியே பிரபல­மா­னது.

சாணக்­கியம், வியூகம் என்ற அடை­மொ­ழி­க­ளோடு இவ்­வாறு பல அதி­ர­டி­களை மு.கா. செய்­தி­ருக்­கின்­றது. அவற்றில் பல பிழை­யா­கவும் அமைந்­தமை வேறு­கதை.

இந்­நி­லையில், இவ்­வி­ட­யத்தில் முன்­ன­னு­பவம் இல்­லாத மேற்­படி ஐ.ம.சு.மு. மாகாண சபை உறுப்­பி­னர்கள் மு.கா.வுக்கு எதி­ராக இவ்­வா­றான காய்­ந­கர்த்­தலை மேற்­கொண்­டமை என்­ன­வென்று வரை­ய­றுக்க முடி­யா­துள்­ளது.

ஆக மொத்­தத்தில், கள நிலை­மை­களின் போக்­கு­க­ளையும் சாத்­தி­ய­வளம் பற்­றியும் சரி­யாக சீர்­தூக்கிப் பார்க்­காது இவர்கள் தமது பலத்தை மிகை மதிப்­பீடு செய்­தி­ருப்­ப­தாகக் கூட குறிப்­பிட முடியும்.

இதுவே மு.கா.வுக்கும் கிழக்கின் ஆட்­சியில் பங்­கெ­டுத்­தி­ருக்கும் ஏனைய கட்­சி­க­ளுக்கும் மறு­பு­றத்தில் நன்மை பயப்­ப­தாக அமைந்து விட்­ட­தெ­னலாம்.

எது எவ்­வா­றி­ருந்த போதும் முஸ்லிம் காங்­கிரஸ் தமது முத­ல­மைச்­சரை நிய­மித்து விட்­டாலும் தாம் விரும்­பி­யோ­ருக்கு அமைச்­சுக்­களை பிரித்துக் கொடுத்­து­விட்­டாலும் கிழக்கின் ஆட்சி மிகக் குளிர்­மை­யா­ன­தாக இருக்கப் போவ­தில்லை.

குறிப்­பாக தேசிய அர­சாங்கம் என்ற எண்­ணக்­க­ருவை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்று முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் நினைத்­த­தா­லேயே எல்லாக் கட்­சி­க­ளுக்கும் அழைப்பு விடுக்­கப்­பட்­டது.

ஆனால் இப்­போது ஐ.ம.சு.மு.வின் ஒரு சில உறுப்­பி­னர்கள் தற்­போ­தைய ஆட்­சிக்கு எதி­ரா­ன­வர்­க­ளாக இருக்­கின்­றனர். இவர்கள் எதிர்தரப்பு ஆசனங்களில் அமர்வார்களா என்பது ஒருபுறமிருக்க, இந்நிலைமை மு.கா. தலைவரின் கனவான தேசிய அரசாங்கம் என்ற நோக்கத்திற்கு கணிசமான சவாலாக அமையக் கூடும்.

அதிருப்தியாளர்கள் எட்டுப்பேரும் சிதறாமல் ஓரணியில் தொடர்ந்தும் நிற்பதோடு மட்டுமல்லாமல் எதிர்க்கட்சி ஆசனத்திலும் அமர்ந்தால் நிலைமைகள் மோசமாவதுடன் ஐக்கிய மாகாண கனவும் சிதறுண்டு போகும் அபாயமிருக்கின்றது.

நல்ல சம்பந்தம் பார்த்து மேலிடத்துக் கல்யாணம் மேள தாளங்கள் முழங்க நடந்தேறி விட்டது.சீதனமும் பகிர்ந்தளிக்கப்பட்டு விட்டது.

ஆனால் முன்னமே மாப்பிள்ளை கேட்டு மனமுடைந்து போன, சம்பந்தி கனவை காவு கொடுத்த பெண் வீட்டுக்காரருக்கு இன்னும் வஞ்சம் தீரவில்லை.

அவர்கள், பாலும் தேனும் போல இருக்கும் புதிய சம்பந்திகளுக்கு இடையில் மந்திர தந்திரங்களைச் செய்து மனக்கசப்பை ஏற்படுத்தி விடுவார்களோ அதனால் வாழ்க்கை பிரிந்து விடுமோ என்ற பயம் உள்ளுக்குள் இருக்கவே செய்கின்றது.

தந்திரங்கள் பலித்தால் இந்த சம்பந்தத்திற்கு கண்பட்டு விடும்!

– ஏ.எல்.நிப்றாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விளைச்சல் பொய்த்துப்போன சோகத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு விவசாயி தற்கொலை!!
Next post ரேணிகுண்டாவில் செயின் பறிப்பில் ஈடுபட்ட திருத்தணி பெண் உள்பட 2 பேர் கைது!!