பிரபா குழுவுக்கெதிரான ஒரு தலைப்பட்சமான யுத்த நிறுத்தம் மீளப்பெறப்படுகின்றது. எமது பதிலடி நடவடிக்கை தொடரும்
கருணா அம்மானின் ‘ரிஎம்விபி” ராணுவ பிரிவு அறிவிப்பு
இலங்கை அரசாங்கத்தின் சமாதான முன்னெடுப்புகளுக்கு ஆதரவளிக்கும் முகமாக எமது அரசியல் பீடத்தினால் முடிவுசெய்யப்பட்ட பிரபாகுழுவுக்கு எதிரான கடந்த 30.ஜனவரி.2006 அன்று பிரகடனப்படுத்தப்பட்ட யுத்தநிறுத்தத்தை மீளப்பெற எமது அரசியல்பீடம் முடிவு செய்துள்ளதென தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் அரசியற்துறை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாம் யுத்தநிறுத்தத்தை மேற்கொண்டது பிரபாகுழுவுக்காக அல்ல. ஏனெனில் சமாதானம், யுத்த நிறுத்தம், புரிந்துணர்வு இவையெல்லாம் பிரபாகுழுவின் அகராதியில் இல்லாத விடயங்கள். அவர்களுக்குத் தெரிந்த ஒரேமொழி கொலைதான். எமது அரசியற்பீடம் ஏற்கனவே பிரகடனப்படுத்திய யுத்தநிறுத்தத்தில் தெளிவாகவே கூறியிருந்தோம்.
எமது தாக்குதல்களை நிறுத்தியிருக்கும் காலப்பகுதியில் எமது போராளிகளுக்கோ அல்லது எமது ஆதரவாளர்களுக்கோ பிரபாகுழுவினால் ஏதும் தாக்குதல்கள் இடம்பெறும் பட்சத்தில் நாம் இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவிடம் முறையிடப் போவதில்லை எனவும், எமது போராளிகளையும், ஆதரவாளர்களையும் பாதுகாக்க நடைமுறைச் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்று… இதற்கிணங்க கடந்த 30ஏப்ரல்2006 அன்று எமது காந்தாக்காடு முகாமை பிரபாகுழு தாக்கியதை தொடர்ந்து எமது இராணுவப் பிரிவு நடைமுறைச் சாத்தியமான தமது பதிலடி நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. பிரபாகுழுவுக்கு தெரிந்த மொழியிலேயே நாம் அவர்களுடன் பேசுவோம். எமது பதிலடி நடவடிக்கையின் முதற்கட்டமாக மங்களன் மாஸ்டர் தலைமையிலான எமது விசேட தாக்குதல் படையணியினால் பிரபா குழுவின் மூதூர் நாவலடிக் காவலரண்கள் கடந்த 02மே2006 அன்று தாக்கியழிக்கப்பட்டது. இதில் எட்டு பிரபாகுழுவின் உறுப்பினர்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர். பிரபாகுழுவினர் கொக்கரிப்பதைப் போல எமது காந்தாக்காடு முகாம் மீதான அவர்களின் தாக்குதல் வெற்றியளிக்கவில்லை. உண்மையில் இப்போது பிரபாகுழுவினர் எமது போராளிகளின் போராட்டத் திறமைகளைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பிரபாகுழுவின் முன்னனித் தளபதிகளினால் 300இற்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் எமது காந்தாக்காடு முகாமை தாக்கிய போதும் றீகசீலன் தலைமையிலான எமது 50 போராளிகளின் தாக்குதலை பிரபாகுழுவினால் சமாளிக்க முடியவில்லை. இறுதியில் அவர்கள் விரண்டோட வேண்டியேற்பட்டது. அத்தாக்குதலில் எமது ஒன்பது போராளிகள் வீரமரணம் அடைந்தனர். பிரபாகுழுவின் தரப்பில் அவர்களது 14உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். புpரபாகுழுவின் இத்தாக்குதலினால் நாம் எழுச்சியடைந்துள்ளோமே தவிர வீழ்ச்சியடையவில்லை. இதனை நாம் பிரபாகுழுவுக்கு உணர்த்தி வருகின்றோம்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating