வாங்கிய அறையால் கூந்தலை வெட்டிய நடிகை!!
ஆரோகணம்’ படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் ஜெய் குஹைனி. இவர் தற்போது புதுமுக இயக்குனர் சந்திய மூர்த்தி இயக்கும் சி.எஸ்.கே என்னும் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். சார்லஸ் ஷபிக் கார்த்திகா ஆகிய பெயர்களின் முதல் எழுத்தையே படத்தின் பெயராக வைத்துள்ளனர். இப்படத்தில் ‘இனிது இனிது’ ஷரண், நாராயண், விமல் ஆகியோர் நடித்துள்ளனர். எஸ்.எஸ்.பிலிம் பேக்டரி தயாரித்துள்ள இப்படம் மார்ச் 13ம் தேதி வைப்ரன்ட் மூவீஸ் மூலம் வெளியிடவுள்ளனர்.
பி.எஸ்சி. பிலிம் டெக்னாலஜி மாணவியான ஜெய் குஹைனி சி.எஸ்.கே. படத்தில் நடித்தது பற்றிய அனுபவங்களை கூறும்போது, சி.எஸ்.கே படத்தில் கார்த்திகா எனும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன். படத்தில் எனக்கு வசனங்கள் குறைவு. நடிப்பிற்கு இடம் அதிகமாகவே இருந்தது. நடிக்கவே வேண்டாம் என்று முடிவெடுத்த போது இந்த கதையை இயக்குனர் சத்யா என்னிடம் கூறினார். உடனே முடிவை மாற்றிக்கொண்டேன்.
200 லிட்டர் தண்ணீர் இருக்கும் டேங்கில் கைகால் கட்டி முங்க விட்டது, கையை கட்டி இரண்டு மாடிகள் தரதரவென இழுத்து சென்றது என ஒரு ஹீரோவுக்கு நிகராக காட்சிகள் இருந்தது. இத்தகைய காட்சிகள் டூப் போடாமல் நடித்ததில் உடலில் காயங்கள் ஏற்பட்டாலும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
நாராயண் ஒரு காட்சியில் என்னை அறைய வேண்டும். அப்படி அறையும் பொழுது அவரது சட்டை பட்டனில் எனது நீண்ட முடி சிக்கிக் கொண்டது. அன்று முடிவெடுத்து எனது கூந்தலின் நீளத்தை குறைத்து விட்டேன்.
சி.எஸ்.கே படத்தில் நடித்த பிறகு, ஏஞ்சலினா ஜோலி போல் அதிரடி சண்டை காட்சிகளில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசையாக மாறியுள்ளது. படத்தின் ஆரம்பத்தில் வரும் ‘உந்தன் முகம் பார்க்க’ பாடல் அனைவரையும் கவரும். இப்படத்தில் பல நபர்களின் நெடு நாள் உழைப்பு இருக்கிறது. அனைவரும் பார்க்கக் கூடிய குடும்பத் திரைப்படம். அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும்.” என்றார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating