கமர்ஷியல் படமாக உருவாகும் எங்களுக்கு வேறு கிளைகள் கிடையாது!!

Read Time:1 Minute, 52 Second

f056f6c2-c4ef-42eb-a6ab-a823042229ae_S_secvpfஒரு தொட்டில் சபதம், ரயிலுக்கு நேரமாச்சு ஆகிய படங்களை இயக்கியவர் பாரதி மோகன். இவர் தற்போது இயக்கி வரும் படம் ‘எங்களுக்கு வேறு கிளைகள் கிடையாது’. இதில் விக்ரம் சந்துரு, சஞ்சய் ஆகியோர் நாயகனாக நடிக்கிறார்கள். கதாநாயகியாக அய்யனார் வீதி, அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா போன்ற படங்களில் நடித்த சாரா தேவா நடிக்கிறார்.

மேலும் இவர்களுடன் நிழல்கள் ரவி, சிங்கம்புலி, மனோபாலா, இமான் அண்ணாச்சி, போஸ் வெங்கட், டி.பி.கஜேந்திரன், டெல்லிகணேஷ், அப்புக்குட்டி, ஓசூர் மாதேஷ், சுடர்மதி, ரேகா, மதுமிதா, தேவதர்ஷினி ஆகியோர் நடிக்கிறார்கள். வில்லனாக காளிச்சரண் அறிமுகமாகிறார்.

இப்படம் ஒரு கமர்ஷியல் படமாக உருவாகி வருகிறது. தாதா பிடியில் சிக்கித் தவிக்கும் பிரபல சினிமா இயக்குனரின் போராட்டம், அதிலிருந்து அவரை கதாநாயகனும் அவனது நண்பர்களும் எப்படி மீட்டு வருகிறார்கள் என்பதை கமர்ஷியலாக உருவாக்குகிறார்கள். இதில் காதல் மோதல் என எல்லாம் இடம்பெறுகிறது.

இப்படத்தை ராமாபுரம் ராஜேஷ் வழங்க ஆர்.ஆர்.ராகவேந்திரா பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் ஒளிப்பதிவை லால்பாபு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தைகளை பெற்று வளர்ப்பது கஷ்டம்-ஜெனிலியா!!
Next post நடிகை காஜல் அகர்வால்- (அழகிய படங்கள்) -அவ்வப்போது கிளாமர்-