பஞ்சாபில் பிளஸ்-2 மாணவி மீது ஆசீட் வீச்சு: இருவர் கைது!!

Read Time:1 Minute, 25 Second

ee6d3c7f-c692-4e2b-b1e2-0841f4aa5a65_S_secvpfபஞ்சாபில் கன்வான் என்ற சிறு நகரத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவி மீது ஆசீட் வீசப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.

இருவரில் மன்பிரீத் என்ற நபர் பலமுறை ஆசிட் வீச்சுக்கு உள்ளான பெண்ணின் காதலை பெற முயன்றுள்ளார். அதில் தோல்வியடைந்ததால் தன் நண்பர் ஒருவருடன் சேர்ந்து, பள்ளியில் தேர்வு முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவி மீது ஆசீட்டை வீசியுள்ளார். அதில் அப்பெண்ணின் உடலில் 60 சதவீதத்திற்கு தீக்காயம் ஏற்பட்டது. இது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றி கருத்து தெரிவித்த அம்மாநில கல்விதுறை அமைச்சர், மிகவும் வெட்கக்கேடான செயல் இது என தெரிவித்தார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவி, குணமடைந்த பின் அவர் பிரத்யேகமாக தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார் என்றும் அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அஞ்சுகிராமம் அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் புகுந்து ரூ.9 லட்சம் மதிப்புள்ள நகை-பணம் கொள்ளை!!
Next post ஐதராபாத்தில் டி.வி. நடிகைக்கு செக்ஸ் தொல்லை: தயாரிப்பாளர் கைது!!