அப்பாவின் அறிவுரையை ஏற்று சினிமாவுக்கு கதை எழுதும் சுருதிஹாசன்!!

Read Time:2 Minute, 2 Second

7a6700ca-9fd7-44e3-9d51-942fa2869f9e_S_secvpfசுருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தியில் பிசியாக நடிக்கிறார். விஜய் ஜோடியாக நடிக்கும் ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் நடிக்க வேண்டும் என்பது எல்லா நடிகைகளின் கனவாக இருக்கிறது. தற்போது அவருக்கு ஜோடியாக புதுப்படமொன்றில் சுருதிஹாசன் நடிக்கிறார். இதன் மூலம் தெலுங்கு படங்களில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சுருதிஹாசன் அளித்த பேட்டி வருமாறு:–

எனக்கு இசையில் ஆர்வம் உண்டு. நிறைய படங்களில் பாடி இருக்கிறேன். தற்போது நடிப்பிலும் தீவிரம் காட்டுகிறேன். ஒரே தொழிலை திரும்ப, திரும்ப செய்வது எனக்கு பிடிக்காது.

முதலில் இசையில் விருப்பம் இருந்தது. இப்போது நடிப்பை நேசிக்கிறேன். அடுத்து சினிமாவுக்கு கதைகள் எழுதும்படி எனது தந்தை கமல் ஆலோசனை கூறினார். அதை ஏற்றுக்கொண்டு கதை எழுத ஆரம்பித்து உள்ளேன். ஏற்கனவே கதை, கவிதைகள் எழுதி தந்தையிடம் காண்பித்து பாராட்டு பெற்றுள்ளேன்.

அப்போது ‘‘எந்த துறை விருப்பமோ அந்த துறைக்கு போ’’ என்று அவர் அறிவுரை கூறுவார். அதன்படி பிடித்த துறைக்கு வந்து இருக்கிறேன். ஒரே வேலையை செய்தாலும் போரடித்து விடும். எதிர்காலத்தில் நான் என்னவாக இருப்பேன் என்று தெரியாது.

இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நான் யாரையும் காதலிக்கவில்லை: இனியா!!
Next post நெல்லை அருகே கள்ளக்காதலியை வெட்டிய தொழிலாளி தற்கொலை!!