புரசைவாக்கத்தில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் சிக்கினார்!!

Read Time:1 Minute, 19 Second

32c41ffc-e6b4-4929-b2f1-cc5f5f06cc8d_S_secvpfசெற்குன்றத்தை சேர்ந்தவர் பானு. இவர் புரசைவாக்கத்தில் உள்ள கடையில் ஜவுளி எடுப்பதற்காக வந்தார். பின்னர் செற்குன்றம் செல்வதற்காக (159ஏ) மாநகர பஸ்சில் ஏறினார்.

பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் அருகில் நின்ற மர்ம வாலிபர் திடீரென பானு கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்தான். பின்னர் ஓடும் பஸ்சில் இருந்து கீழே குதித்து ஓட்டம் பிடித்தான்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பானு கூச்சலிட்டார். பஸ்சில் இருந்த பயணிகளும், சாலையில் சென்ற பொதுமக்களும் கொள்ளையனை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அவனை வேப்பேரி போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவன் ஓட்டேரியை சேர்ந்த சுரேஷ் என்பது தெரிந்தது. அவனிடம் இருந்து நகை பறிமுதல் செய்யப்பட்டது. அவன் இதுபோல் வேறு எந்த கொள்ளையிலும் ஈடுபட்டுள்ளானா என்று விசாரணை நடந்து வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோவையில் மர்ம காய்ச்சலுக்கு இளம்பெண் பலி!!
Next post எதிர்ப்பை மீறி திருமணம் செய்த காதல்ஜோடியை கொல்ல முயற்சி: 2 பேர் கைது!!