கொடநாடு அருகே பொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!!

Read Time:2 Minute, 21 Second

a67455d9-80e3-4460-b3a2-cd96f31fa4bd_S_secvpfநீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட் அருகே அண்ணாநகர் மற்றும் தோடர் பழங்குடியினர் வசிக்கும் கோடுதேனீமந்து, பான்காடுமந்து ஆகிய பகுதிகள் உள்ளன.

இந்த பகுதியில் கடந்த மாதம் தோடரின மக்களின் எருமை மாட்டை கொன்ற சிறுத்தை புலியை வனத்துறையினர் பிடித்து அவலாஞ்சி பகுதியில் விட்டனர்.

இந்தநிலையில் கொடநாட்டில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது. இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சமும், பீதியும் ஏற்பட்டது. தனியே நடந்து செல்லவே தயங்கினர்.

இதையடுத்து வனத்துறையினர் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதாக கருதப்பட்ட பகுதிகளில் கூண்டு வைத்தனர்.

அந்த கூண்டில் சிறுத்தை சிக்கியது. தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் கூண்டில் சிக்கிய சிறுத்தையை வேனில் ஏற்றி நீலகிரி மாவட்டம் தெற்கு வனக்கோட்டத்துக்கு உட்பட்ட அவலாஞ்சி வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு கூண்டை திறந்து விட்டனர். கூண்டில் இருந்து விடுபட்ட சிறுத்தை வனப்பகுதிக்குள் மின்னலாய் ஓடி மறைந்தது.

இதுகுறித்து வனஅலுவலர் சவுந்திர பாண்டியன் கூறும் போது கடந்த 12–ந் தேதி கொடநாட்டில் பெண் சிறுத்தை சிக்கியது.

இந்த நிலையில் பான்காடு பகுதியில் கால்நடைகளை விலங்கு தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அங்கு கூண்டு வைக்கப்பட்டது. அந்த கூண்டில் ஆண் சிறுத்தை சிக்கியது. அந்த சிறுத்தைக்கு 3 வயது இருக்கும். கூண்டில் சிக்கிய சிறுத்தையை பாதுகாப்பாக வனப்பகுதியில் விட்டுவிட்டோம் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகை சோனியாவின் சூடான படங்கள்… (அவ்வப்போது கிளாமர்)
Next post கோவையில் மர்ம காய்ச்சலுக்கு இளம்பெண் பலி!!