3 மாணவிகள் கையில் சூடம் ஏற்றிய விவகாரம்: பள்ளி தலைமை ஆசிரியரிடம் தனி தாசில்தார் விசாரணை!!

Read Time:3 Minute, 33 Second

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கருமந்துறையில் அரசு உண்டு உறைவிட மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவ–மாணவிகள் தங்க கருமந்துறை பஸ் நிலையம் அருகே விடுதி உள்ளது. இதில் மாணவிகள் விடுதியில் 150 மாணவிகள் தங்கி உள்ளனர்.

கடந்த 12–ந்தேதி விடுதியின் இரண்டாம் நம்பர் அறையில் தங்கி இருந்த 8–ம் வகுப்பு மாணவி கிருபாவதியின் பணம் 150 மாயமானது. அவரும், 9–ம் வகுப்பு மாணவி சுகன்யா, மாணவி கலாவதி ஆகியோர் தங்களுடன் சேர்ந்து தங்கி இருந்த 3 மாணவிகளான மீனா (7–ம் வகுப்பு), சிவலட்சுமி (6–ம் வகுப்பு), சுகனேஸ்வரி (6–ம் வகுப்பு) ஆகியோரிடம் பணத்தை எடுத்தீர்களா என்று கேட்டனர். அவர்கள் பணத்தை எடுக்கவில்லை என்று கூறினர். அப்படி என்றால் கையில் கற்பூரத்தை ஏற்றி சத்தியம் செய்யுங்கள் என்று கூறினர்.

இதனால் மாணவிகள் 3 பேரின் கையிலும் கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்ய வைத்தனர். மறுநாள் (13–ந்தேதி) காலை இந்த தகவல் பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேஸ்வரன் கவனத்துக்கு தெரிய வந்தது. அவர் 3 மாணவிகளையும் கருமந்துறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளித்து விட்டு பின்னர் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் இந்த சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

நேற்று ஆத்தூர் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல தனி தாசில்தார் புகழேந்தி நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது மாணவிகள் கிருபாவதி, சுகன்யா, கலாவதி ஆகிய 3 பேரும் தாங்கள் தெரியாமல் மாணவிகள் கையில் கற்பூரம் ஏற்றி சத்தியம் வாங்கியதாக தெரிவித்தனர். இனிமேல் அப்படி செய்ய மாட்டோம் என்றும் உறுதி அளித்தனர். மேலும் கையில் கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்ததால் காயம் அடைந்த 3 மாணவிகளும் தங்களுடன் தங்கி உள்ள அந்த 3 மாணவிகள் மீதும் நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். மாணவிகளின் பெற்றோர்களும் இதே கருத்தை தெரிவித்தனர். இதனால் மாணவிகளிடம் கடிதம் எழுதி வாங்கி விட்டு அவர்களை மன்னித்து விட்டனர்.

நடந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று தனி தாசில்தார் புகழேந்தி பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேஸ்வரனுக்கு நோட்டீசு கொடுத்தார். விடுதிக்கு காப்பாளர் கிடையாது என்பதால் விடுதி பொறுப்பையும் தலைமை ஆசிரியர்தான் கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அம்பத்தூரில் 5 பெண்கள் உள்பட  6  பேர் மாயம்: போலீசார் விசாரணை!!
Next post மத்திய பிரதேசத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு காங்கிரஸ் தலைவர் பலி!!