கொடைக்கானலில் நகர்மன்ற துணை தலைவர் மகளை கடத்திய கும்பல்!!

Read Time:1 Minute, 19 Second

b8fa52e0-7c8d-416e-b954-d5f92fdc7efb_S_secvpfகொடைக்கானல் நகர்மன்ற துணைத்தலைவராக இருப்பவர் எட்வர்ட். இவரது மகள் ஜெயபிரியங்கா (19). இவரும், அதே பகுதியைச்சேர்ந்த ஜான்பீட்டர் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து தெரியவரவே பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நேற்று வீட்டில் இருந்த ஜெயபிரியங்கா திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. விசாரணையில் ஜான்பீட்டர் அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து கடத்திச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து எட்வர்ட் கொடைக்கானல் போலீசில் புகார் செய்தார். புகாரில், தனது மகளை ஜான்பீட்டர், சசி பார்த்திபன், சாம், புளோரா மேரி ஆகியோர் சேர்ந்து கடத்திச்சென்று விட்டனர். அவர்களிடமிருந்து எனது மகளை மீட்டுத்தர வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிவகாசி அருகே 8–ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை!!
Next post நாகை அருகே மாணவியை கடத்தி ரூ.5 லட்சம் கேட்ட வாலிபர் கைது!!