டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற 255 வழித்தடங்கள்: போலீஸ் ரோந்துப்பணியை தீவிரப்படுத்த உத்தரவு!!

Read Time:1 Minute, 26 Second

559d5d4a-029e-4eb3-af70-83d6af299641_S_secvpfடெல்லியில் பெண்கள் அதிகம் சென்று வரக்கூடிய பொழுதுபோக்கு மற்றும் உணவகங்களுக்கு அருகாமையில் இருக்கும் 255க்கும் மேற்பட்ட பாதைகள் அவர்களுக்கு பாதுகாப்பற்றதாக இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு போலீஸ் ரோந்துப்பணியை தீவிரப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய உள்துறை செயலாளர் எல்.சி.கோயல் தலைமையில் டெல்லியின் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இருட்டான பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்தவும், வாகன நிறுத்துமிடங்கள், வணிக வளாகங்கள் மற்றும் பிற பொது இடங்களில் வெப் கேமராக்களை பொருத்தவும் உள்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும், பெண்கள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கேரளாவில் உடல் உறுப்புகளை திருடி விற்கும் வாலிபர் கைது!!
Next post திருவண்ணாமலை அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டு!!