மாணவிகளின் மடியில் உடகார்ந்த மாணவனின் படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட 6 மாணவர்கள் சஸ்பெண்ட்!!

Read Time:2 Minute, 55 Second

bcd20c66-039a-4ff0-9d18-3cd15c5db50a_S_secvpfமங்களூரு அருகே உள்ள சூரத்கல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கிருஷ்ணாபுராவை சேர்ந்தவர் முகமது ரியாஷ் (வயது 20). இவர், மங்களூருவில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.சி.ஏ. இறுதி ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில், முகமது ரியாஷ் தனது கல்லூரியில் பயிலும் 5 மாணவிகளின் மடியில் படுத்து கிடப்பது போல மர்ம நபர்கள் சித்தரித்து ‘வாட்ஸ்அப்’ சமூக வலைதளத்தில் படம் வெளியிட்டனர்.

இந்த படம் ‘வாட்ஸ்அப்’ மூலமாக மங்களூரு நகர் முழுவதும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இந்த நிலையில், கடந்த 21–ந்தேதி முகமது ரியாஷ் தனது வீட்டில் நண்பர்களான வினித், ரித்தீஷ் ஆகியோருடன் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது, அவரது வீட்டுக்கு காரில் வந்த 5 பேர் கும்பல் முகமது ரியாசை காரில் கடத்தி அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் வைத்து அடித்து உதைத்துவிட்டு சென்றுவிட்டனர். இதில் காயம் அடைந்த முகமது ரியாஷ் மங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே, அவர் சூரத்கல் போலீசில் புகார் செய்தார்.

அதில், ‘வாட்ஸ்அப்’பில் என்னுடன் பயிலும் 5 மாணவிகளின் மடியில் நான் படுத்து இருப்பது போல படம் சித்தரித்து வெளியிடப்பட்டு உள்ளது. அதில் இருப்பது நான் அல்ல. எனது படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டு இருந்தது.

ஆனால் தன்னை மர்ம நபர்கள் தாக்கியது பற்றி முகமது ரியாஷ் புகாரில் குறிப்பிடவில்லை. இந்த புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போதுதான் முகமது ரியாசை மர்ம நபர்கள் காரில் கடத்தி தாக்கியிருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில், தனியார் கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தி, முகமது ரியாசை, மாணவிகளுடன் சேர்த்து சித்தரித்து படம் வெளியிட்டதாக கூறி அந்த கல்லூரியில் படித்து வரும் 6 மாணவர்களை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பீகார்: நிலத்தகராறில் 2 பெண்கள் உட்பட 4 பேர் மீது ஆசிட் வீச்சு!!
Next post காயல்பட்டினம் பஸ் நிலையத்தில் ஓட ஓட விரட்டி பத்திர எழுத்தர் படுகொலை!!