இ-சிகரெட்டால் கனவாய் போன குழந்தை ஆசை: தத்து கொடுக்க மறுத்த சமூக சேவை மையம்!!

Read Time:3 Minute, 23 Second

687f2706-e6e3-4de3-8ac5-f825a4205b89_S_secvpfஇங்கிலாந்தை சேர்ந்த அபிகெயில்(43), பிரெயின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தம்பதியினருக்கு திருமணமாகி நீண்ட நாட்கள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் செயற்கை கருத்தரிப்பு முறையான ஐ.வி.எப். முறையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த சிகிச்சைகளுக்காக 20000 யூரோ வரை (19 லட்ச ரூபாய்) செலவு செய்தும் பலனில்லாத நிலையில், நிறைய குழந்தைகள் நல்ல குடும்பம் கிடைக்காமல் அனாதை விடுதிகளில் இருக்கும் போது நாம் ஏன் அவர்களை தத்தெடுக்கக்கூடாது என்று முடிவு செய்தனர்.

இதனால், 2013-ம் ஆண்டு இறுதியில் ஸ்டாஃபோர்டுஷைர் கவுண்டியில் உள்ள ஒரு சமூக சேவை மன்றத்தை அணுகி குழந்தையை தத்தெடுப்பதற்காக விண்ணப்பித்தனர். இங்கிலாந்தில் தத்தெடுப்பதற்கான கெடுபிடிகள் அதிகம் என்பதால் அவர்களுக்கு நேர்முகத்தேர்வு உட்பட பல சோதனைகள் செய்யப்பட்டது. இது அவர்களின் பொறுமையை சோதித்தது. இறுதியாக செப்டம்பர் மாதம் குழந்தையை வளர்ப்பதற்கான பொருளாதார தகுதி இருக்கிறது என்று அதிகாரிகள் முடிவு செய்த நிலையில் விரைவில் தங்களுக்கு குழந்தை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர்.

அபிகெயில் சிகரெட் பிடிப்பது அதிகாரிக்கு தெரிய வந்ததும் நிலைமை தலைகீழாக மாறியது. இத்தனைக்கும் அந்த காலகட்டத்தில் சிகரெட் பழக்கத்தை விடுவதற்காக அவர் இ-சிகரெட் தான் பிடித்துக்கொண்டிருந்தார். ஆனால் அக்டோபர் மாதம் அவருக்கு இ-மெயில் அனுப்பிய சமூகசேவை மையம் இ-சிகரெட் புகைப்பதால் உங்களுக்கு குழந்தையை தத்துக்கொடுக்க முடியாதென்றும் 12 மாதம் நீங்கள் சிகரெட் புகைக்காமல் இருந்தால் உங்களுக்கு குழந்தையை கொடுப்பது பற்றி யோசிக்க முடியும் என்று தெரிவித்தது.

இது மிகவும் மோசமானது என்று குற்றம் சாட்டும் அபிகெயிலும் அவரது மனைவியும் இதனால் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மருத்துவர்கள் இ-சிகரெட்டிலிருந்து வரும் புகையால் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு பாதிப்பில்லை என்று தெரிவித்திருந்தும், இங்கிலாந்து சுகாதாரத்துறையே இ-சிகரெட் பிடிப்பது மிகவும் குறைவான பாதிப்பையே ஏற்படுத்தும் என்று தெரிவித்த நிலையில் இந்த சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பேய் பிடித்ததாக சொல்லி பெண்மணியை சூடு போட்டு கொன்ற ஏழு பேர் கைது!!
Next post ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழக பாதிரியார் பிரேம் குமார் விடுதலை!!