பேய் பிடித்ததாக சொல்லி பெண்மணியை சூடு போட்டு கொன்ற ஏழு பேர் கைது!!

Read Time:1 Minute, 31 Second

a51725ef-9486-4c56-aa0a-59d19def6788_S_secvpfமேற்கு வங்க மாநிலத்தின் பன்குரா மாவட்டத்தில் சூன்யக்காரர்கள் துன்புறுத்தலால் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்ப்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் 57 வயதான ஷிபானி பிஸ்வாஸ். அந்த பெண்ணுக்கு பேய் பிடித்து விட்டதாக கூறி சூன்யக்காரர்களிடம் அழைத்து சென்றனர். அங்கிருந்த ஏழு பேரும் பேயை ஓட்டுவதாக சொல்லி ஒரு சிறிய அறைக்குள் அந்த பெண்மணியை அழைத்துச்சென்றனர்.

அங்கு வைத்து துடைப்பத்தால் ரத்தம் வருமளவுக்கு அப்பெண்ணை அடித்து துன்புறுத்திய அவர்கள், பெண்ணின் உடல் முழுவதும் பழுக்க காய்ச்சிய இரும்பால் சூடு வைத்தனர்.

இதனால் நினைவிழந்து காணப்பட்ட அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் 7 சூன்யக்காரர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post களக்காட்டில் காதலியை கடத்தி கற்பழித்த கட்டிட தொழிலாளி கைது!!
Next post இ-சிகரெட்டால் கனவாய் போன குழந்தை ஆசை: தத்து கொடுக்க மறுத்த சமூக சேவை மையம்!!