ஆபாச பட சர்ச்சைகள்: ஹன்சிகா ஓய்வு!!

Read Time:2 Minute, 27 Second

Untitled-16ஆபாச படங்கள் வெளியானதால், வருத்தத்தில் இருக்கிறார் ஹன்சிகா. குளியலறையில் இந்த படத்தை வீடியோவில் திருட்டுத்தனமாக எடுத்து இன்டர்நெட் மற்றும் வாட்ஸ்அப்களில் பரப்பி இருந்தனர்.
வீடியோவில் இருப்பது ஹன்சிகா அல்ல என்று அவரது தரப்பில் மறுக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் ஹன்சிகா வீடியோ என்ற பெயரிலேயே இவை பரவி வருகின்றன.

இதுகுறித்து சைபர் கிரைம் பொலிசில் புகார் அளிப்பது குறித்து ஹன்சிகா ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. அத்துடன் இந்த ஆபாச படவிவகாரம் ஹன்சிகாவுக்கு மனவருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதனால் படப்பிடிப்பில் இருந்து தற்காலிகமாக அவர் ஓய்வு எடுத்து இருக்கிறார். தனது தத்து குழந்தைகளுடன் நேரத்தை செலவிட முடிவு செய்துள்ளார்.

இந்த குழந்தைகளை ஹன்சிகா தன்னுடைய ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் தத்து எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த குழந்தைகளுக்கான படிப்பு செலவு, தங்குமிடம், உணவு போன்ற எல்லாவற்றையும் ஹன்சிகாவே கவனித்துக் கொள்கிறார். மொத்தம் 30 குழந்தைகளை தத்து எடுத்து இருக்கிறார்.
இதில் சில குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. எனவே குழந்தைகளுடன் தங்கி சில நாட்களை கழிக்க முடிவு செய்துள்ளார்.

ஹன்சிகா கைவசம் ஆறு படங்கள் உள்ளன. இவற்றில் விஜய் ஜோடியாக நடிக்கும் ‘புலி’ படத்தின் பாடல் காட்சிகளில் இரு தினங்களுக்கு முன் நடித்து முடித்தார். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது.
ஜெயம்ரவி ஜோடியாக நடிக்கும் ரோமியோ ஜூலியட் படமும் முடியும் தருவாயில் உள்ளது. சிம்புவுடன் நடிக்கும் வாலு படத்தையும் முடித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோயம்பேட்டில் பிக்பாக்கெட் அடித்த வாலிபர் கைது!!
Next post பெண்களை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட ராணுவ வீரர் மீது தாக்குதல்: 2 கேரள ரவுடிகள் கைது!!