உதயநிதி-எமி ஜாக்சன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் கொச்சியில் நாளை ஆரம்பம்!!

Read Time:1 Minute, 37 Second

4f18c9b1-6c7b-4fb2-a0f8-e65536053b0f_S_secvpfஉதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள ‘நண்பேன்டா’ படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகவிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து, ‘மான் கராத்தே’ படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தில் நாயகியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் தொடங்கியது.

உதயநிதி கதாநாயகனாக நடித்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘இது கதிர்வேலன் காதல்’ தற்போது வெளியாக இருக்கும் ‘நண்பேன்டா’ படத்திற்கும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். தற்போது 4-வது படமாக இப்படத்திற்கும் ஹாரிஸ் இசையமைக்கிறார்.

தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் உதயநிதிக்கு அப்பாவாக சத்யராஜ் நடிக்கிறார். உதயநிதி தனது சொந்த நிறுவனமான ரெட்ஜெயன்ட் மூவிஸ் மூலம் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நாளை கொச்சியில் தொடங்குகிறது. அங்கு தொடர்ந்து 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்தவுள்ளனர். பின்னர் அடுத்த கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பள்ளிக்கு செல்லாததை தந்தை கண்டித்ததால் மகள் தற்கொலை!!
Next post சமந்தாவை காண திரண்ட ரசிகர்கள்: போலீஸ் தடியடி!!