சங்கரன்கோவில் அருகே புதுமாப்பிள்ளை கொலையில் கைதான வாலிபரிடம் விசாரணை!!

Read Time:3 Minute, 35 Second

2dcf3616-f3bb-4ea2-aafa-6c79eed3a4a9_S_secvpfநெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சுப்புலாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 31). கூலித்தொழிலாளியான இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு விக்னேஷ்வரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 18–ந்தேதி வீரணாபுரத்தை சேர்ந்த முத்துக்குமரன் (28) என்பவர் வேலை வாங்கி தருவதாக கூறி முத்துக்குமாரை அழைத்து சென்றுள்ளார். அதன்பின்பு முத்துக்குமார் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து அவரது தந்தை ராமகிருஷ்ணன் கரிவலம்வந்தநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அடுத்த அப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் முத்துக்குமார் கழுத்து நெரிக்கப்பட்டு பிணமாக கிடப்பதாக கரிவலம்வந்தநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு கரிவலம்வந்தநல்லூர் மற்றும் வெம்பக்கோட்டை போலீசார் விரைந்து சென்று முத்துக்குமாரின் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் விபரம் வருமாறு:–

கொலை செய்யப்பட்ட முத்துக்குமாருக்கும், அதே பகுதியை சேர்ந்த முருகேசன் (34) என்பவருக்கும் கடந்த 2006–ம் ஆண்டு ஏற்பட்ட தகராறில் முத்துக்குமாரை முருகேசன் கொல்ல முயன்றுள்ளார்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை வாபஸ் வாங்குமாறு முத்துக்குமாரிடம் முருகேசன் கூறியுள்ளார். ஆனால் இதற்கு அவர் சம்மதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த முருகேசன் தனது நண்பரான முத்துக்குமரன் மூலம் முத்துக்குமாரை பைக் மூலம் வரவழைத்து அவருக்கு மது வாங்கி கொடுத்துள்ளார்.

போதை தலைக்கேறிய முத்துக்குமாரை இருவரும் சேர்ந்து கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்து கிணற்றில் வீசியது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த முத்துக்குமரனை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான முருகேசனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். முருகேசன் மீது சங்கரன்கோவில், கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் நிலையங்களில் கொலை மிரட்டல், அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தஞ்சையில் பெண்ணை கிண்டல் செய்ததால் ஆட்டோ டிரைவர் கொலை!!
Next post பெங்களூர் அழகிகளை விபசாரத்தில் தள்ளிய துணை நடிகை, கணவருடன் போலீசில் சிக்கினார்!!