அணைக்கட்டு அருகே 5–ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற பெயிண்டர் கைது!!

Read Time:2 Minute, 9 Second

a704d9a1-8714-4183-a8d4-9cd7db72f9db_S_secvpfஅணைக்கட்டு அடுத்த வரதலம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது22) பெயிண்டர். நேற்று மாலை 5 மணியளவில் தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக அதே பகுதியை சேர்ந்த 5–ம் வகுப்பு மாணவி செல்வி (வயது10) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடைக்கு சென்றாள். அவளை வழிமறித்த ராஜ்குமார் எங்கு செல்கிறாய். கடைக்கு என்னுடன் வா நான் சாக்லேட் வாங்கி தருகிறேன் என்று கூறி அழைத்து சென்றுள்ளார்.

மாணவியை கீழ்கொத்தூர் காட்டு பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் பயந்த மாணவி அலறி கூச்சலிட்டார்.

அப்போது அந்த வழியாக சென்றவர்கள் மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு நடந்ததை பார்த்து திடுக்கிட்டனர்.

அதிர்ச்சியடைந்த அவர்கள் ராஜ்குமாரை பிடித்து அடித்து உதைத்து ஊருக்குள் இழுத்து வந்தனர். அவனை பஞ்சாயத்து தலைவர் சங்கரனிடம் ஒப்படைத்தனர். அதற்குள் அப்பகுதியில் ஏராளமானோர் திரண்டனர். சம்பவத்தை கேள்விப்பட்ட மாணவியின் பெற்றோர் கதறி அழுதனர்.

இது சம்பந்தமாக வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி பெயிண்டர் ராஜ்குமாரை கைது செய்தனர்.

இந்த சம்பவம் அணைக்கட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (PHOTOS)வவுனியாவில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களின் பிள்ளைகளுக்கு உதவி!!
Next post குன்னூரில் பட்டப்பகலில் கடையில் 25 பவுன் நகை திருடிய பெண் கைது!!