நீதிமன்ற அறையில் பேய்: திறக்க மறுக்கும் அதிகாரிகள்!!

Read Time:1 Minute, 48 Second

1cdd2f40-86ee-4722-8fb0-273e5eaa38a2_S_secvpfபேய் இருப்பதாக கூறி நீதிமன்ற அறையை மூடி வைத்திருப்பது மைசூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மைசூர் முதல் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றமன்றத்தில் உள்ள ஒரு விசாரணை அறையில் பல முக்கிய வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. கோர்ட்டின் நுழைவு வாயிலில் உள்ள இந்த அறையைத்தான் பேய் அறை என்று கூறி மூடி வைத்துள்ளனர். உடைந்த நாற்காலிகள் மற்றும் டேபிள்களை அந்த அறையில் போட்டு வைத்துள்ளனர்.

பல்வேறு வழக்குகளுக்கு தீர்ப்பளித்த நீதிபதி ஒருவர் கடந்த ஆண்டு விபத்தில் பலியாகிவிட்டார். இதையடுத்து புதிய நீதிபதி நியமித்த பிறகும், அவர் இருந்து தீர்ப்பளித்த இந்த அறையில் பேய் நடமாடுவதாக வந்த வதந்தியை தொடர்ந்து நீதிமன்ற அதிகாரிகள் கடந்த 9 மாதங்களாக இந்த அறையை திறக்க மறுக்கிறார்கள்.

பேயை விரட்ட மந்திரவாதியை கொண்டு இந்த அறையில் பூஜைகளும் நடத்தப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. மந்திரவாதி கூறியபடி அறை இன்னும் பூட்டி வைக்கபட்டு உள்ளது. இந்த வதந்திக்கு வழக்கறிஞர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என மைசூர் பார் அசோசியேஷன் கேட்டுக்கொண்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எழும்பூரில் ஓடும் பஸ்சில் டிரைவரை தாக்கிய பள்ளி மாணவர்கள்!!
Next post ரூ.2 ஆயிரம் பணத்துக்காக சிறுவனை கடத்திய வாலிபர்: திருப்பதியில் போலீசார் கைது செய்தனர்!!