வெள்ளிச்சந்தை அருகே பட்டதாரி பெண் கற்பழிப்பு: வாலிபர் வெறிச்செயல்!!

Read Time:3 Minute, 2 Second

771dd184-3036-43bb-a3c5-d7b4d123deb7_S_secvpfவெள்ளிச்சந்தை அருகே உள்ள ஆளூர் பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் எம்.பி.ஏ. படித்து விட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பெபின்(25). பாலிடெக்னிக் கல்லூரி படித்துவிட்டு வீட்டில் இருக்கிறார். இவர் இளம்பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று மாலை இளம்பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த பெபின் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பெண்ணிடம் வற்புறுத்தி உள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பெபின் வீட்டை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு, அந்த இளம்பெண்ணை வலுக்கட்டாயப்படுத்தி கற்பழித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் கூச்சல் போட்டு அலறியதால் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடி வந்தனர். இதனால் பயந்துபோன பெபின் வீட்டு கதவை திறந்து கொண்டு வெளியே தப்பி ஓடினார்.

இச்சம்பவத்தில் இளம்பெண்ணுக்கு உதடு உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனே அவரை ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவலறிந்து வெள்ளிச்சந்தை போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது நடந்த சம்பவங்களை கூறி அழுத இளம்பெண், பெபின் மீது புகார் அளித்தார். அதன்பேரில் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். சப்–இன்ஸ்பெக்டர் இளங்கோ விசாரணை நடத்தி வருகின்றார்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு இன்று ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட உள்ளதாகவும், மருத்துவ பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் பெபின் மீது மேலும் சில பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே தலைமறைவான பெபினை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருவண்ணாமலையில் கள்ளக்காதலி உயிரோடு எரித்து கொலை: வேன் டிரைவர் கைது!!
Next post பணகுடி அருகே வடமாநில வாலிபர் மர்மச்சாவு: நிர்வாண நிலையில் பிணம் மீட்பு!!