இசையமைப்பாளர் சைமனுக்கு நாளை திருமணம்: காதலியை கரம்பிடிக்கிறார்!!

Read Time:1 Minute, 39 Second

e36b7853-1b32-4b59-a95c-c28a0b8b9127_S_secvpfசசி இயக்கத்தில் பரத் நடித்து வெளிவந்த ‘555’ படத்தின் மூலம் சினிமாவுக்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் சைமன். இப்படத்தை தொடர்ந்து பரத் நடிப்பில் வெளிவந்த ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’ படத்திற்கும் இவரே இசையமைத்திருந்தார்.

இந்த படத்திற்கு பிறகு எந்த படத்திலும் இவர் இசையமைக்கவில்லை. தற்போது விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார்.

இந்நிலையில், சைமனுக்கும், அவரது நீண்டநாள் காதலியுமான ஷிபாவிற்கும் நாளை திருமணம் நடைபெறவிருக்கிறது. ஷிபா தனியார் கம்பெனியில் உயர் பதவியில் இருக்கிறார். மேலும், பின்னணி பாடகியாகவும் வலம் வருகிறார். ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘கலகலப்பு’ ஆகிய படங்களில் இவர் பாடல் பாடியுள்ளார்.

இவர்களது திருமணம் இருவரது பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெறவிருக்கிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தேவாலயத்தில் இருவரும் மோதிரம் மாற்றிக் கொள்கிறார்கள். பின்னர், இரவு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அனைவருக்கும் விருந்து ஏற்பாடு செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஹலோ சொல்லப் போன வாலிபரின் முகம் கிழிந்தது: சார்ஜரில் இருந்த செல்போனில் பேசியதால் விபரீதம்!!
Next post ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து காதலியை காப்பாற்ற முயற்சிகள் செய்தேன்: காதலன் கண்ணீர் பேட்டி (வீடியோ இணைப்பு)!!