ஆர்.எஸ்.மங்கலம் அருகே மூதாட்டி கொலை!!

Read Time:2 Minute, 11 Second

f2ed7582-d9b7-4b5e-bac0-f1627ca2545f_S_secvpfராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள ஆவரேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணியம்மாள் (வயது70). இவர் தனியாக வசித்து வந்தார்.

நேற்று காலை இவரது வீட்டுக்கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லையாம். எனவே அவர் வெளியூர் சென்றிருக்கலாம் என அக்கம் பக்கத்தினர் கருதினர். ஆனால் வீடு உள்பக்கம் பூட்டப்பட்டு இருந்ததால் சந்தேகம் எழுந்துள்ளது.

இதனை தொடர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அந்தோணியம்மாள் பிணமாக கிடப்பது தெரிய வந்தது. அவரை யாரோ கழுத்தில் துணியால் இறுக்கி கொலை செய்துள்ளனர்.

இது குறித்து ஓரிக்கோட்டை கிராமத்தில் உள்ள அவரது மகள் ஆரோக்கியமேரி (55)க்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து திருப்பாலைக்குடி போலீசில் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் சேது மற்றும் போலீசார் விரைந்து சென்று அந்தோணியம்மாள் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் அவர் அணிந்திருந்த 7 பவுன் நகைகள், வீட்டின் பெட்டியில் இருந்த ரூ.7 ஆயிரம் கொள்ளை போயிருப்பதும் தெரியவந்தது.

அந்தோணியம்மாள் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த யாரோ ‘மர்ம’ மனிதன், அங்கு சென்று கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்டுள்ளான் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொலை செய்யப்பட்ட அந்தோணியம்மாள் உடலை, பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த போலீசார் கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செங்குன்றம் அருகே கோவில் கும்பாபிஷேகத்தில் 4 பெண்களிடம் நகை பறிப்பு!!
Next post மக்கள் பணிக்காக துடிக்கும் நடிகை!