ஐதராபாத்தில் டி.வி. நடிகை தற்கொலை: காதலனிடம் விசாரணை!!

Read Time:2 Minute, 58 Second

0b118d46-1d6c-4554-8dc6-7a5633bdb530_S_secvpfதெலுங்கு திரைப்படங்களிலும், டி.வி. தொடரிலும் நடித்து வந்தவர் தீப்தி. 31 வயதான இவர் ஐதராபாத் பட்டே நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் காதலன் ரமேஷ்குமாருடன் கணவன்– மனைவியாக குடித்தனம் நடத்தி வந்தார். ரமேஷ்குமாரும் திரையுலகில் பணியாற்றி வருகிறார்.

மேற்கு கோதவரி மாவட்டம் தனுகுரை சேர்ந்த அப்பாநாயுடு மகளான தீப்தியின் இயற்பெயர் ராமலட்சுமி. இவருக்கும் விஜயநகரம் பார்வதிபுரத்தில் பெயிண்டராக வேலை பார்க்கும் சங்கருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 5 வயதில் மகனும் உள்ளார்.

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் கணவரை விவாகரத்து செய்து விட்டு ஐதராபாத்துக்கு குடிவந்தார்.

தீப்தி என்ற பெயரில் பல்வேறு தெலுங்கு படங்களில் துணை நடிகையாக நடித்து உள்ளார். மேலும் அகவனம், லக்கிலட்சுமி போன்ற டி.வி. தொடர்களிலும் நடித்து வந்தார். சில டி.வி. தொடர்களுக்கு தயாரிப்பாளராகவும் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை தீப்தி மர்மமான முறையில் பிணமாக வீட்டில் மின் விசிறியில் தொங்கினார். இதை பார்த்த அவரது காதலர் ரமேஷ்குமார் பிணத்தை இறக்கி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

சனந்த்நகர் போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். தீப்தி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது தெரியவில்லை.

அவரது மரணத்தில் மர்மம் இருப்பதை சந்தேகித்த காதலன் ரமேஷ் குமாரிடம் விசாரணை நடத்தினார்கள்.

அவர் கூறும்போது, ‘‘நேற்று காலை வீட்டிற்கு வந்தேன். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்தேன். தீப்தி தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். பின்னர் ஜன்னல் வழியாக சென்று பிணத்தை இறக்கினேன்’’ என்றார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே தீப்தி தனது தற்கொலையை தனது ‘ஐ பேடில்’ பதிவு செய்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செஞ்சி அருகே கிணற்றில் தள்ளி 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை முயற்சி!!
Next post கண்டித்தும் கள்ளக்காதலை கைவிட மறுத்த பெண்ணின் அழகை சிதைக்க ஆசிட் வீசிய கணவன் கைது!!